ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பகிர்ந்து கொண்ட அஸ்வின் மற்றும் ஆண்டர்சன்..!! முதல் இடத்திற்கு அதிகரிக்கும் போட்டி..!!

ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் அண்மையில் முதலிடம் பிடித்த ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 3 வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு வெளியான ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் உடன் பகிர்ந்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில், இந்திய அணி சார்பில் அசத்தல் பவுலிங்கை வெளிப்படுத்திய அஸ்வின் ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் 864 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அசத்தினார். இந்த பட்டியலில் 859 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் டெஸ்ட் பவுலர் தரவரிசையில் பல நாட்களாக முதல் இடத்தில் இருந்த பேட் கம்மின்ஸ் 858 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்தார்.
அதன் பின் இறுதியாக நடைபெற்று முடிந்த 3 வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தாலும் ரேடிங்களில் 5 புள்ளிகள் குறைந்த நிலையில், ஐசிசி டெஸ்ட் பவுலர் தரவரிசையில் முதலிடத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருவரும் பகிர்ந்து உள்ளார்கள். மேலும் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க போட்டி அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி டெஸ்ட் பவுலர் தரவரிசையில் பேட் கம்மின்ஸ் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத நிலையில் 849 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார் , மேலும் தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் காகிசோ ராபடா அசத்தல் 807 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார், எனவே ஐசிசி டெஸ்ட் பவுலர் தரவரிசையில் முதல் இடத்திற்கு போட்டி அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.