கேப்டனின் அசுர ஆட்டம்...ராஜஸ்தான் அபார வெற்றி...! | GT vs RR IPL 2023 Highlights

ஐபிஎல் 2023 தொடரின் 23வது லீக் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே பரபரப்பாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. அதனால் முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 177 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்த விளையாட வரும் ராஜஸ்தான் அணி 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட ஆரம்பித்தது.
போட்டியின் ஆரம்பத்திலையே ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் குஜராத் அணியின் பந்து வீச்சில் சுருண்டனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய தேவதூட் படிகள் மற்றும் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். அதிலும் சஞ்சு சாம்சன் 4 (3) மற்றும் 6 (6) அடித்து குஜராத் அணியை கதிகலங்க வைத்தார்.
ஆனால் அவரின் ஆட்டம் 14வது ஓவரில் முடிவுக்கு வந்தது ராஜஸ்தான் அணிக்கு பெரும் இழப்பு. 16வது ஓவர் முடிவில் ராஜாதான் ராயல்ஸ் அணி 24 பந்துகளுக்கு 44 ரன்கள் எடுக்க வேண்டும். இருப்பினும் அணியின் வெற்றிக்காக உறுதியுடன் விளையாட ஆரம்பித்தனர் துருவ் ஜூரல் மற்றும் ஷிம்ரோன் ஹெட்மியர். இருவரும் இணைந்து குஜராத் அணியின் பந்து வீச்சாளர்களை கதற விட்டனர். ஆனால் 18வது ஓவரில் முஹம்மத் ஜூரில் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார் துருவ் ஜூரல்.
அடுத்ததாக களமிறங்கிய ரவிச்சந்திரன் அஷ்வின் முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸ் மற்றும் பௌண்டரி அடித்து அனைவரையும் ஆச்சர்ய படுத்தினார். ஆனால் வந்த வேகத்தில் அவுட் ஆகி ஆட்டத்தை விட்டு வெளியேறினார். தோல்வியை நோக்கி சென்ற ராஜஸ்தான் அணி 19வது ஓவர் முடிவில் 171/7 என்ற நிலையில் இருந்தனர். ஆட்டத்தை நிறைவு செய்ய டிரெண்ட் போல்ட் விளையாட ஆரம்பித்தார். ஆட்டத்தின் இறுதி வரை ஷிம்ரோன் ஹெட்மியர் அசத்தலாக விளையாடி ராஜஸ்தான் அணியை வெற்றியடைய செய்து விட்டார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
சிறப்பாக விளையாடி குஜராத் அணியின் வெற்றிக்காக 3 விக்கெட்டுகளை எடுத்தார் முஹம்மத் சமி. இது ராஜஸ்தான் அணியின் 4வது வெற்றி என்பதால் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டனர். குஜராத் அணியின் இரண்டாவது தோல்வியை தழுவியது.