டாஸ் வென்ற ராஜஸ்தான்...பௌலிங் தேர்வு! | RCB vs RR IPL 2023 Toss Update

ஐபிஎல் 2023 தொடரின் 32 வது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொள்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் குறித்த விவரங்களை பற்றி பார்க்கலாம்.
ஐபிஎல் பொறுத்த வரையில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணி இரண்டுமே மிகவும் வலுவான அணியாக திகழ்ந்து வருகிறது. இந்த ஐபிஎல் 2023 தொடரில் ராஜஸ்தான் அணி போட்டியிட்ட 6 போட்டிகளில் 4 மேட்ச்சில் வெற்றிப் பெற்று முன்னிலையில் இருக்கிறது. அதே போல பெங்களூரு அணி 3 போட்டியில் வெற்றியும், 3 இல் தோல்வியும் பெற்றுள்ளது. இன்று நடைபெற உள்ள போட்டி இருவருக்கு மிகவும் முக்கியம் என்பதால் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும்.
தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். எனவே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன்: விராட் கோலி ©, ஃபா டு பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர், ஷாபாஸ் அகமது, சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, விஷாக் விஜய் குமார், முகமது சிராஜ்.
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: யாஷ்சவி கைஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், தேவ்தட் படிக்கல், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.