ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனின் பலம் வாய்ந்த பிளேயிங் லெவன் குறித்த அப்டேட்..!! | rr playing 11 2023

இந்தியாவின் முக்கிய தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில் களமிறங்க உள்ள முன்னணி அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிறந்த அதிரடி பிளேயிங் லெவன் பற்றிய அனைத்து விவரங்களையும் காண்போம்.
ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இதுவரை மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்ல போராடி வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்தியது, அதேபோல் இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2வது முறையாக ஐபிஎல் பட்டத்தை வெல்லும் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2023 ஆம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரர்கள் இடத்தில் ஜோஸ் பட்லர் மற்றும் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கி சிறப்பான தொடக்கத்தை அளிப்பார்கள், மிடில் ஆர்டரை பலப்படுத்தும் வகையில் கேப்டன் சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மையர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முக்கிய பலமாக இருக்க போவது ஆல்ரவுண்டர்கள் ரியான் பராக் மற்றும் ஜேசன் ஹோல்டர் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக அணியின் பவுலர்கள் பிரிவில் டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல்,ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் குல்தீப் சென் மிகவும் உதவுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மிகச்சிறந்த பிளேயிங் லெவனாக, இந்த பிளேயிங் லெவன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராஜஸ்தான் அணி இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை கட்டாயம் வெல்லும் முனைப்பில் முழு வீச்சில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2023 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியோடு ஏப்ரல் 2ஆம் தேதி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிறந்த பிளேயிங் லெவன் : ஜோஸ் பட்லர் (வி.கீ), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மையர், ரியான் பராக், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், குல்தீப் சென், யுஸ்வேந்திர சாஹல்.