அடுத்தடுத்த ரெண்டு சாதனை.. மாஸ் காட்டிய ஜெய்ஸ்வால்.. திணறிய மும்பைக்கு டார்கெட் இதுதான்.. | MI vs RR IPL 2023 1st Innings Highlight

ஐபிஎல் 2023 தொடரின் 42வது லீக் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்த்து விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, இதையடுத்து ராஜஸ்தான் அணி சார்பில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் களம் கண்டனர். முதல் ஓவரிலேயே சிக்சர் விளாசி கணக்கை தொடங்கிய ஜெய்ஸ்வால், மெரிடித் ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசி மிரட்டினார்.
இதன் மூலம் ராஜஸ்தான் அணி பவர் பிளேயின் 6 ஓவர்கள் முடிவில் 65 ரன்களை குவித்தது. பின்னர் நிதானமாக விளையாடிய பட்லர் 18 ரன்களில் சாவ்லா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த சாம்சன் சிக்சருடன் தொடங்கினார். ஆனால் அர்ஷ்த் கான் பந்துவீச்சில் கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்களில் ஆட்டமிழக்க, 10 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 97 ரன்களை குவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அரைசதம் விளாச, இன்னொரு பக்கம் படிக்கல் 2 ரன்களில் விக்கெட்டை பறிகொத்தார். பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் ராஜஸ்தான் அணியின் சீனியர் வீரர்கள் திணற, இன்னொரு பக்கம் இளம் வீரர் ஜெய்ஸ்வால் பவுண்டரி, சிக்சர் என்று விளாசி தள்ளினார்.
பின்னர் வந்த ஹோல்டர் 11 ரன்களிலும், ஹெட்மயர் 8 ரன்களிலும், ஜுரெல் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், ஜெய்ஸ்வால் ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரியும், சிக்ருமாய் விளாசி அணியின் ரன்களை எகிற செய்தார். இதன் காரணமாக 53 பந்துகளில் சதம் விளாசி ஜெய்ஸ்வால் 100 (53) சாதனை படைத்தார். சொந்த மண்ணில் ஜெய்ஸ்வால் சதம் எடுத்ததோடு, இந்திய அணிக்கு அறிமுகமாவதற்கு முன் சதம் விளாசிய 6வது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
ஆனால், கடைசி ஓவரின் 3வது பந்தில் ஜெய்ஸ்வால் 124(62) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மும்பை அணிக்கு 213 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.