சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கலக்கி வரும் ரஹானே இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தல்…!! | rahane comeback in indian team

ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வரும் முன்னணி வீரர் அஜிங்கியா ரஹானே தனது கிரிக்கெட் பயணத்தின் இரண்டாவது பாதி பகுதிக்கு விதை போட்டு உள்ளார் என்று கூறினால் மிகையில்லை, குறிப்பாக நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் ரஹானே இடம்பிடித்து அசத்தியுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி வீரர் அஜிங்கியா ரஹானே அசத்தலான ஆட்டத்திற்கு பேர் போனவர், கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வந்தார். அதன்பின் பார்ம் அவுட் ஆன ரஹானே இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்தார், பிறகு இந்திய அணியின் ஒப்பந்தத்தில் இருந்து விலக்கப்பட்டார்.
இதனை அடுத்து இந்தியாவின் உள்நாட்டு தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரஹானே கலக்கினார், குறிப்பாக ரஞ்சி கோப்பை 2022-2023 தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்ட ரஹானே 11 இன்னிங்ஸில் 57.63 சராசரியுடன் 634 ரன்கள் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்படாமல் இருந்த அஜிங்கியா ரஹானே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் அடிப்படை விலைக்கு வாங்கப்பட்டார், தற்போது நடைபெற்று வரும் 2023 தொடரில் அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணிகளை மிரட்டி வருகிறார். தற்போது வரை சிஎஸ்கே அணிக்காக 5 போட்டிகளில் விளையாடிய ரஹானே 199.04 ஸ்டிரைக் ரேட்டில் 209 ரன்கள் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் அஜிங்கியா ரஹானே இடம்பெற்றுள்ளார். அதாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அணி இந்திய ஆடவர் தேர்வு குழு மூலம் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் ரஹானே நீண்ட நாட்கள் பிறகு இடம்பெற்று அசத்தி உள்ளார். இந்த செய்தி கிரிக்கெட் வட்டாரங்களில் முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.