ஐபிஎல் அரங்கில் சிஎஸ்கே கேப்டன் தோனி உடைய சாதனையை முறியடித்த அஜிங்கிய ரஹானே…!! | rahane broke dhoni record

ஐபிஎல் 2023 ஆம் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக சென்னை அணியில் இணைத்துள்ள அனுபவ வீரர் அஜிங்கிய ரஹானே உடைய சிறப்பான ஆட்டம் அரங்கேறியது என்று கூறினால் மிகையில்லை, குறிப்பாக முக்கிய சாதனை ஒன்றையும் படைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாதனை பட்டியலில் இடம் பிடித்தார்.
ஐபிஎல் தொடரில் மிகவும் முக்கிய போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டி எப்போதும் கருதப்படும், அதற்கு முக்கிய காரணம் இந்த இரு அணிகள் ஐபிஎல் தொடரில் பதிவு செய்துள்ள மகத்தான சாதனைகள் தான். ஐபிஎல் தொடரில் அதிகமாக 5 முறை சாம்பியன் பட்டம் பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை பெற்று இரண்டாவது இடத்திலும் உள்ளது.
ஐபிஎல் அரங்கில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டியை காண தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்று கூறினால் மிகையில்லை. ஐபிஎல் 2023 தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பலபரிச்சை மேற்கொண்டார்கள், இந்த போட்டியில் சென்னை அணி சார்பில் களமிறங்கிய முன்னணி வீரர் அஜிங்கிய ரஹானே மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 19 பந்துகளில் அரைசதம் பதிவு செய்து அசத்தினார்.
இதன்மூலம் சென்னை அணிக்காக அதி வேகமாக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியை பின்தள்ளி அஜிங்கிய ரஹானே முன்னிலை பெற்று அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில்,
1) சுரேஷ் ரெய்னா 16 பந்துகளில் அரைசதம் vs பஞ்சாப் கிங்ஸ் (2014)
2) மொயீன் அலி 19 பந்துகளில் அரைசதம் vs ராஜஸ்தான் ராயல்ஸ் (2022)
3) அஜிங்கிய ரஹானே 19 பந்துகளில் அரைசதம் vs மும்பை இந்தியன்ஸ் (2023)
4) எம் எஸ் தோனி 20 பந்துகளில் அரைசதம் vs மும்பை இந்தியன்ஸ் (2012)
இந்த பட்டியலில் 3வது இடத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கிய முதல் போட்டியில் அஜிங்கிய ரஹானே பதிவு செய்து, கேப்டன் எம்.எஸ்.தோனி சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக பல அணிகள் மாறி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்த முன்னணி வீரர் அஜிங்கிய ரஹானே உடைய சிறந்த கம்பேக் ஆக கிரிக்கெட் வட்டாரங்களில் உள்ள அனைவராலும் ரசிகர்களாலும் இந்த சிறப்பான ஆட்டம் பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.