ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த அஸ்வின்..!! விராட் கோலி முன்னேற்றம்..!! | ashwin icc rankings 2023

இந்திய அணியின் முன்னணி டெஸ்ட் பவுலர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் ஐசிசி டெஸ்ட் பவுலர் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடினார்கள், இந்த தொடரில் இந்திய அணிக்காக அசத்தல் பவுலிங் வெளிப்படுத்திய அஸ்வின் 25 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இதன்மூலம் ஐசிசி தரவரிசையில் முதல் இடத்திற்கு போட்டியாக இருந்த இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்தள்ளி 869 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்து உள்ளார்.
இந்த டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னர் ஐசிசியின் டெஸ்ட் பவுலர் தரவரிசையில் முதலிடத்தை அஸ்வின் மற்றும் ஆண்டர்சன் 859 புள்ளிகளுடன் பகிர்ந்து கொண்டனர், ஆனால் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அஸ்வின் 7 கைப்பற்றிய நிலையில் ஐசிசி தரவரிசையில் 10 புள்ளிகள் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி கடைசி டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நிலையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளது, அதாவது 4வது டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 186 ரன்கள் பெற்றார். இதன்மூலம் ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 7 இடங்கள் முன்னேறி 13வது இடம்பிடித்து உள்ளார்.
அதேபோல் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளார், இந்த டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் 264 பெற்று பேட்ஸ்மேன் தரவரிசையில் 44 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.