IND VS AUS TEST 2023 : 4வது டெஸ்ட் போட்டியில் அனில் கும்ப்ளே சாதனையை முறியடிப்பாரா..?? அஸ்வின்..!! ashwin all set to break anil kumble record

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வரும் நிலையில், தற்போது நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி ஸ்பின் பவுலர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியின் முன்னாள் பவுலர் அனில் கும்ப்ளே உடைய முக்கிய சாதனையை முறியடிக்க உள்ளார்.
இந்திய அணிக்காக முன்னணி பவுலராக டெஸ்ட் போட்டிகளில் கலக்கி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த பார்டர் கவாஸ்கர் தொடரிலும் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவி வருகிறார். இந்நிலையில் 4 வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இன்னும் 10 விக்கெட்டுகளை பெற்றால் சர்வதேச போட்டிகளில் 700 விக்கெட்களை பதிவு செய்வார்.
இதுவரை இந்திய அணிக்காக அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 467 விக்கெட்களையும், ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்களையும் மற்றும் டி20 தொடர்களில் 72 விக்கெட்களையும் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த 4வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 10 விக்கெட்டுகளை பெற்றால் சர்வதேச அளவில் 700 விக்கெட்களை பெற்ற 3 வது இந்திய வீரர் என்ற பெருமையை அடைவார்.இதுவரை முன்னாள் இந்திய வீரர்கள் அணில் கும்ப்ளே (956) மற்றும் ஹர்பஜன் சிங் (711) பெற்று உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 4வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இன்னும் 5 விக்கெட்டுகளை பெற்றால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை பெறும் இந்திய வீரர் என்ற பெருமையை அடைவார். அதாவது இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தான் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 111 டெஸ்ட் விக்கெட்டுகளை பெற்று முதல் இடத்தில் உள்ள நிலையில் அஸ்வின் தற்போது 107 விக்கெட்களுடன் 2வது இடத்தில் உள்ளார், எனவே இந்த போட்டியில் அனில் கும்ப்ளே உடைய சாதனையை அஸ்வின் முறியடிப்பார் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில் 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் உஸ்மான் கவாஜா 48*(134) ரன்களிலும் ஸ்டீவ் ஸ்மித் 12*( 57) ரன்களுடன் களத்தில் உள்ள நிலையில் 106 ரன்கள் பதிவாகி செய்துள்ளது, மேலும் இந்திய அணி சார்பில் அஸ்வின் மற்றும் ஷமி தலா ஒரு விக்கெட்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.