பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டிக்கான டாஸ் & பிளேயிங் லெவன் அப்டேட்.. | IPL 2023 PBKS Vs RCB Toss Update

ஐபிஎல் 2023 தொடரின் 27 வது லீக் போட்டியில் சாம் குர்ரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எதிர்க்கொள்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் குறித்த விவரங்களை பற்றி பார்க்கலாம்.
பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை இதுவரை 5 போட்டிகளில் விளையாடி, 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அந்தவகையில், கொல்கத்தா, ராஜஸ்தான், லக்னோ அணிகளுக்கு எதிராக வெற்றியும், ஐதராபாத், குஜராத் அணிகளுக்கு எதிராக தோல்வியையும் சந்தித்தது. இதன் மூலம், பஞ்சாப் கிங்ஸ் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது.
அதேபோல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பொறுத்தவரை இந்தாண்டு பங்கேற்ற 5 போட்டிகளில் 2 வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. அதாவது, தொடரின் ஆரம்பத்தில் மும்பை அணியை வீழ்த்திய தெம்புடன் டெல்லி அணியியை எதிர்கொண்டு அந்த அணிக்கு எதிராகவும் வெற்றி பெற்றது. ஆனால், கொல்கத்தா, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்து, அதிர்ச்சி கொடுத்தது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறது.
தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் குர்ரன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார், எனவே விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்ய உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்: அதர்வா டைடே, மேத்யூ ஷார்ட், ஹர்பிரீத் சிங் பாட்டியா, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் குர்ரன்(கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா(வி.கீ), ஷாருக் கான், ஹர்ப்ரீத் ப்ரார், நாதன் எல்லிஸ், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன்: விராட் கோலி (கேப்டன்), ஃபாஃப் டு பிளெசிஸ், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (வி.கீ), வனிந்து ஹசரங்கா, சுயாஷ் பிரபுதேசாய், ஹர்ஷல் படேல், வெய்ன் பார்னெல், முகமது சிராஜ்.