பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் லீக் போட்டி குறித்த விவரங்கள்..!!

ஐபிஎல் 2023 ஆம் தொடர் மிகவும் கோலாகலமாக ஆரம்பித்து முதல் போட்டி அதிரடியாக நடைபெற்றது, இந்த தொடரின் 2வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள். இந்த போட்டியின் வெற்றி கணிப்புகள், பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை உள்ளிட்ட விவரங்களை காண்போம்.
இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் புதிய கேப்டன்கள் உடன் களமிறங்க உள்ளதால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது, இந்த தொடரில் இரு அணிகளில் யார் முதல் வெற்றியை பதிவு செய்வார் என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தால் போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
போட்டி குறித்த விவரம் :
2 வது லீக் போட்டி : பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
நேரம் & நாள் : 3:30 p.m & சனிக்கிழமை
தேதி : 1 ஏப்ரல் 2023
மைதானம் : பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானம், மொஹாலி.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா ஆப்
பிட்ச் அறிக்கை :
ஐபிஎல் தொடரின் 2வது லீக் போட்டி நடைபெற உள்ள மொஹாலி கிரிக்கெட் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சிறந்த மைதானமாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது, வேகப்பந்து பவுலர்களுக்கு ஆட்டம் முதல் சில ஓவர்களில் விக்கெட் எடுக்க வாய்ப்புள்ளது. இந்த போட்டி கண்டிப்பாக அதிக ரன் பதிவாக உள்ள போட்டியாக தான் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றி கணிப்பு :
ஐபிஎல் தொடரில் 2 முறை சாம்பியன் பட்டங்கள் வென்று முன்னணி அணியாக விளங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின், நடப்பு 2023 ஆம் ஆண்டு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை 3வது முறையாக கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளதால், இந்த தொடரை வெற்றியுடன் தொடங்க கொல்கத்தா அணி முழுவீச்சில் செயல்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதே சமயத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை தனது முதல் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளது. இந்த தொடரில் புதிய கேப்டன் ஷிகர் தவான் உடன் களமிறங்க உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி கட்டாயம் தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இந்த 2 வது லீக் போட்டியில் வெற்றிக்கான வாய்ப்பு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரு அணிகளுக்கு சமநிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் கட்டாயம் இரு அணிகளும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதால் ரசிகர்கள் போட்டியை காண மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள்.
பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் : ஷிகர் தவான்
துணை கேப்டன் : ஆண்ட்ரே ரசல்
விக்கெட் கீப்பர் : ஜிதேஷ் சர்மா
பேட்ஸ்மேன்கள் : நிதிஷ் ராணா, மந்தீப் சிங், சாருக் கான்
ஆல்ரவுண்டர்கள் : சாம் குரான், சுனில் நரேன்
பவுலர்கள் : உமேஷ் யாதவ், டிம் சவுதீ, அர்ஷ்தீப் சிங்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளேயிங் 11 (தோராயமான) : ஷிகர் தவான்(கேப்டன் ), பிர சிம்ரன் சிங், பானுக ராஜபக்ச, ஜிதேஷ் ஷர்மா(வி.கீ), ஷாருக் கான், சாம் குர்ரன், சிக்கந்தர் ராசா, ஹர்ப்ரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ், ராகுல் சாஹர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிளேயிங் 11 (தோராயமான) : ரஹ்மானுல்லா குர்பாஸ் (வி.கீ), வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஷகிப் அல் ஹசன், மந்தீப் சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.