பஞ்சாப் கிங்ஸ் அணி மிரட்டல் பேட்டிங்..!! ராஜபக்ச, தவான் அசத்தல்..!! | punjab vs kkr match

ஐபிஎல் 2023 ஆம் தொடரின் 3 வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள், குறிப்பாக அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் அரங்கை அதிர வைத்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்த அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி துவம்சம் செய்தார்கள், குறிப்பாக பஞ்சாப் கிங்ஸ் அணி துவக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 23(12) சிறப்பான தொடக்கத்தை அளித்து ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷிகர் தவான் மற்றும் பானுக ராஜபக்ச மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
கொல்கத்தா அணியின் பவுலிங்கை நாலாப்பக்கமும் சிதறடித்து மிரட்டல் பேட்டிங்கை செய்து பானுக ராஜபக்ச 50(32) அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார், அடுத்து ஷிகர் தவான் 40(29) ரன்கள் பதிவு செய்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய பஞ்சாப் வீரர்கள் உடனுக்குடன் விக்கெட்களை பறிகொடுத்தார்கள்.
இறுதியாக ஜோடி சேர்ந்த பஞ்சாப் அணியின் ஆல்ரவுண்டர்கள் சாம் கர்ரன் 26*(17) மற்றும் ஷாருக்கான் 11*(7) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்த நிலையில், 20 ஓவர்கள் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் கொல்கத்தா அணி சார்பில் டிம் சவுதீ 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர், சிறப்பாக பந்து வீசிய வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 26 ரன்கள் வழங்கி 1 விக்கெட் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் தக்க பதிலடி கொடுப்பார்களா என்று பொறுத்திருந்து காண்போம், மேலும் இரு அணிகளில் எந்த அணி ஐபில் 2023 அரங்கில் முதல் வெற்றியை பதிவும் செய்யும் என்பதை காணவும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.