ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர் விலகல்..?? சோகத்தில் ரசிகர்கள்..!!

ஐபிஎல் தொடரில் முக்கிய அணியாக விளங்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து முன்னணி வீரர் காயத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில், 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் தொடரின் 16 வது சீசனுக்கு முன்பாக பல முன்னணி வீரர்கள் தொடரில் இருந்து விலகியுள்ளார், அந்த வரிசையில் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர் ஜானி பேர்ஸ்டோவ் இணைய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வீரர்கள் அதிரடி வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாட 6.75 மற்றும் 11.5 கோடிக்கு வாங்கப்பட்டவர்கள்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடந்த எதிர்பாராத விபத்து மூலம் ஜானி பேர்ஸ்டோவ் காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொண்டு நீண்ட நாட்களாக ஓய்வில் உள்ள நிலையில் காயத்தில் மீண்டு வருகிறார்.இந்நிலையில் மார்ச் 31 ஆம் தேதி ஆரம்பமாக உள்ள ஐபிஎல் தொடரில் பேர்ஸ்டோவ் கலந்து கொள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் லியம் லிவிங்ஸ்டன் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அண்மையில் அனுமதி அளித்த நிலையில், அதே அணியில் இடம்பெற்றுள்ள ஜானி பேர்ஸ்டவுக்கு அனுமதி அளிக்க படவில்லை என்பதால் ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு தொடரில் இருந்து முழுமையாக விலகி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பேர்ஸ்டோவ் தொடரில் இடம் பெறாதது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை, அதே சமயத்தில் ஐபிஎல் ஏலத்தில் 18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட இளம் ஆல்ரவுண்டர் சாம் கர்ரன் ஐபிஎல் 2023 ஆம் தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் ஏப்ரல் 1 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மொஹாலியில் பலபரிச்சை மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.