ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியின் அசத்தல் பிளேயிங் லெவன்..!! | punjab kings playing 11
![ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியின் அசத்தல் பிளேயிங் லெவன்..!! | punjab kings playing 11](https://www.sportspartans.com/assets/uploads/news-1977.jpg)
பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில் கட்டாயம் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக உள்ளது தெளிவாக தெரிகிறது, அதற்கு தயாராகும் வகையில் ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக விலை கொடுத்து அதிரடி வீரர்களை பெற்று அணியின் பிளேயிங் லெவனை பலப்படுத்தியது.
ஐபிஎல் தொடரில் பலமுறை முயன்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி முக்கிய போட்டிகளில் தோல்வியை தழுவி தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்து உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் 2023 ஆம் தொடரில் புதிய கேப்டன் தலைமையில் களமிறங்கும் பஞ்சாப் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தல் வெற்றிகளை பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்கள் இடத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கேப்டன் ஷிகர் தவான் மற்றும் ஜிதேஷ் சர்மா இருவரும் களமிறங்குவார் கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக அதிரடி வீரர் தவான் அணிக்கு நல்ல தொடக்கத்தை அளிப்பார் என்பதில் ஐயமில்லை. அதே சமயத்தில் அணியின் துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் தொடரில் இருந்து விலகிய நிலையில் புதிதாக அணியில் மேட் ஷார்ட் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் அணியின் மிடில் ஆர்டரை பலப்படுத்தும் வகையில் சிறந்த வீரர்கள் ஆன பானுக ராஜபக்ச, லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ஷாருக் கான் அணியில் இடம்பெற்றுள்ளனர்.ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு போன இளம் ஆல்ரவுண்டர் சாம் கர்ரான் சிறந்த பார்மில் உள்ளதால் அணியின் பலம் மிகவும் அதிகரித்துள்ளது, மேலும் பவுலர்கள் இடத்தில் அணிக்கு வேகத்தில் காகிசோ ரபாடா மற்றும் அர்ஷ்தீப் சிங் உதவுவார்கள், ஸ்பின் பவுலிங்கில் ராகுல் சாஹர் பலமாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கனவாக இருக்கும் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை புதிய கேப்டன் ஷிகர் தவான் பெற்று தருவார் என்று ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையில் உள்ளார்கள்.ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் ஏப்ரல் 1 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் சிறந்த பிளேயிங் லெவன் : ஷிகர் தவான்(கேப்டன்), பானுக ராஜபக்ச/மேட் ஷார்ட், ஜிதேஷ் சர்மா (வி.கீ), லியாம் லிவிங்ஸ்டோன், ஹர்பிரீத் ப்ரார், ஷாருக் கான், ரிஷி தவான், சாம் கர்ரான், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர்.