பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் அரங்கேறிய அதிரடி ஆட்டம்..!! பல சாதனைகள் முறியடிப்பு..!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பெஷாவர் சல்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதிய போட்டியில் அனல் பறந்தது, இரு அணிகளும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 கிரிக்கெட்டில் பல சாதனைகள் முறியடித்தார்கள்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் சல்மி அணியின் தொடக்க வீரர்கள் சைம் அயூப் மற்றும் பாபர் அசாம் இருவரும் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பவுலர்கள் சிதறடித்தார்கள், குறிப்பாக சைம் அயூப் 74(34) ரன்களும் பாபர் அசாம் 115(65) பெற்று பெஷாவர் சல்மி இமாலய இலக்கை அடைய வழி செய்தார்கள்.
இந்நிலையில் 20 ஓவர்கள் முடிவில் பெஷாவர் சல்மி 240 ரன்கள் பதிவு செய்து அரங்கை அதிர வைத்தது, அடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி தொடக்க வீரர் ஜேசன் ராய் தனி ஒருவனாக இறுதிவரை களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்து எதிரணிக்கு வானவேடிக்கை காட்டினார்.
அதாவது ஜேசன் ராய் 20 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் உட்பட 63 பந்துகளில் 145 ரன்கள் பெற்றார், அவருக்கு உதவும் வகையில் அணியின் மற்றொரு வீரர் முகமது ஹபீஸ் 41*(18) ரன்கள் பெற்ற நிலையில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 18.2 ஓவர்களில் 243 ரன்கள் பதிவு செய்து அதிரடி வெற்றி பெற்று அசத்தியது. பி.எஸ்.எல் தொடரில் ஒரு தனிநபரின் அதிகபட்ச ஸ்கோராக ஜேசன் ராய் பெற்ற 145 *(63) பதிவாகி சாதனை படைத்தது.
பி.எஸ்.எல் தொடர் வரலாற்றில் அதிகப்படியான ரன் சேஸ் போட்டியாக குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி சேஸ் செய்த 241 ரன் சேஸ் பதிவானது,மேலும் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 4வது வெற்றிகரமான ரன் சேஸ் என்ற சாதனையையும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.