WOMEN'S WORLD CUP T20 2023 : அரையிறுதி போட்டியில் இருந்து பூஜா வஸ்த்ரகர் விலகல்..!! ஹர்மன்பிரீத் கவுர் பங்கேற்பு கேள்விக்குறி..!!

இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து பவுலர் பூஜா வஸ்த்ரகர் விலகியுள்ள நிலையில்,அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பங்கேற்பும் சந்தேகத்திற்குரிய நிலையில் உள்ளது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனில் இன்று (23.2.2023) உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில், அதில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரிட்சை மேற்கொள்ள உள்ளார்கள்.இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து பவுலர் பூஜா வஸ்த்ரகர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.
இந்திய அணியை மேலும் பலவீனம் ஆக்கும் நிலையில் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கண்காணிப்பில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் அரையிறுதி போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் உடைய பங்கேற்பு போட்டிக்கு முன் முடிவு செய்யப்படும் என்று பிசிசிஐ நிர்வாகம் அறிவித்துள்ளது.ஹர்மன்பிரீத் பங்கேற்க முடியவில்லை என்றால் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா இந்திய அணியை அரையிறுதி போட்டியில் வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் அணியை வெற்றிகரமாக பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக வழிநடத்தி அரையிறுதி சுற்று வரை வழிநடத்தி வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முக்கிய போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில் இருப்பது மிகுந்த சோகத்தை அளிப்பதாக இந்திய அணியின் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.