பிரப்சிம்ரன் சிங்கின் வெறித்தனமான ஆட்டம்...பஞ்சாப் அபார வெற்றி | PBKS vs DC IPL 2023 Match Highlights

அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று இரவு ஐபிஎல் 2023 தொடரின் 59வது லீக் போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பௌலிங்கை தேர்வு செய்தது. எனவே, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங் (103), ஷிகர் தவான் (7), லியாம் லிவிங்ஸ்டோன் (4), ஜிதேஷ் சர்மா (5), சாம் கர்ரன் (20), ஹர்ப்ரீத் ப்ரார் (2), ஷாருக் கான் (2) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதில் பிரப்சிம்ரன் சிங் மட்டும் போட்டி தொடங்கியதில் இருந்து 18வது ஓவர் வரையில் நின்று அடித்தார். போட்டி முடிவின் போது சிக்கந்தர் ராசா (11) மற்றும் ரிஷி தவான் (0) அவுட் ஆகாமல் இருந்தனர். டெல்லி அணியின் பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மா (2), அக்சர் படேல் (1), பிரவீன் துபே (1), குல்தீப் யாதவ் (1), முகேஷ் குமார் (1) விக்கெட்டுகள் எடுத்து தங்கள் அணிக்கு வெற்றி வாய்ப்பை அதிகரித்தனர்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி நல்ல தொடக்கத்துடன் போட்டியை ஆரம்பித்தனர். டேவிட் வார்னர் (54), பில் சால்ட் (21), மிட்செல் மார்ஷ் (3), ரிலீ ரோசோவ் (5), அக்சர் படேல் (1), மணீஷ் பாண்டே (0), அமன் ஹக்கிம் கான் (16), பிரவீன் துபே (16) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பஞ்சாப் அணியின் பந்து வீச்சில் சிக்கி அதில் இருந்து மீள முடியாமல் டெல்லி அணி மிகவும் பரிதவித்து விட்டது. போட்டியின் இறுதியில் குல்தீப் யாதவ் (10), முகேஷ் குமார் (6) இருவரும் அவுட் ஆகாமல் இருந்தனர். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தனர். எனவே, பஞ்சாப் கிங்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வென்றது.