பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் மோதும் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் அப்டேட்…!! | pbks vs lsg 2023 toss update

ஐபிஎல் அரங்கில் இன்றைய 38 லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் ஐ எஸ் பிந்த்ரா மைதானத்தில் மோத உள்ளார்கள். இந்த போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் போன்ற முக்கிய விவரங்கள் வெளியானது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த வேளையில், அணியின் கேப்டனாக செயல்பட்ட இளம் வீரர் சாம் கர்ரன் அணியை சிறப்பாக வழிநடத்தினர். தற்போதைய நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி நல்ல பார்மில் உள்ளது, குறிப்பாக கடைசியாக மும்பை அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் அதிரடி வெற்றி பெற்றுள்ளது.
அதே சமயத்தில் கேப்டன் கே எல் ராகுல் தலைமையில் லக்னோ அணி 8 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் நல்ல நிலையில் உள்ளது, ஆனால் கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் மோசமான தோல்வியை தழுவி உள்ளது.இந்நிலையில் கடந்த தோல்வியில் இருந்து மீளும் வகையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற முழுவீச்சில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி செய்லபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் காயத்தில் இருந்து மீண்டு வந்து கேப்டன்சி செய்ய களமிறங்கி டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளார். இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்ய கே எல் ராகுல் தலைமையில் ஆன லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன் : அதர்வா டைடே, ஷிகர் தவான்(கேப்டன் ), சிக்கந்தர் ராசா, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் குர்ரன், ஜிதேஷ் சர்மா(வி.கீ), ஷாருக் கான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், குர்னூர் ப்ரார், அர்ஷ்தீப் சிங்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன் : கே எல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ்/குயின்டன் டி காக், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (வி.கீ), ஆயுஷ் படோனி, நவீன்-உல்-ஹக், ஷிவம் மாவி, ரவி பிஷ்னோய், அவேஷ் கான்.