பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியின் டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் அப்டேட்..!! | pbks vs kkr toss update

இந்தியாவின் முன்னணி தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் அசத்தலாக தொடங்கிய நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இந்நிலையில் இன்று நடைபெற உள்ள பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ள 2 வது லீக் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் வெளியானது.
ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு தொடரின் 2வது லீக் போட்டியில் புதிய கேப்டன்கள் உடன் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள், இந்த போட்டியில் களமிறங்க மிரட்டல் பிளேயிங் லெவன் உடன் ஷிகர் தவான் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் நிதிஷ் ராணா தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் தயார் நிலையில் உள்ளார்கள்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் நிதிஷ் ராணா டாஸ் பவுலிங் தேர்வு செய்தார், இந்நிலையில் ஷிகர் தவான் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது.இந்த போட்டியில் இரு அணிகளும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் புதிய கேப்டன்கள் தலைமையில் களமிறங்க உள்ள அணிகள் எப்படி செயல்பட போகிறது என்று காண்போம்.
ஐபிஎல் 2023 ஆம் தொடரின் முதல் போட்டி மிகவும் மிரட்டலாக தொடங்கிய நிலையில், இந்த 2 வது லீக் போட்டியிலும் அதிரடியை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன் : ஷிகர் தவான்(கேப்டன்), பிரப்சிம்ரன் சிங்(வி.கீ), பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், சாம் குர்ரான், சிக்கந்தர் ராசா, நாதன் எல்லிஸ், ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன் : ரஹ்மானுல்லா குர்பாஸ்(வி.கீ), மன்தீப் சிங், நிதிஷ் ராணா(கேப்டன்), ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், டிம் சவுத்தி, அனுகுல் ராய், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.