பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையிலான போட்டி குறித்த முக்கிய அப்டேட்.!! | pbks vs gt 2023 preview

ஐபிஎல் அரங்கில் விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த வரிசையில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள். இந்த போட்டிக்கான பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, வெற்றி கணிப்பு உள்ளிட்ட முக்கிய விவரங்கள் பற்றி காண்போம்.
ஐபிஎல் அரங்கில் புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் களமிறங்கி விளையாடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் பங்கேற்று 2 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. அதே சமயத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கி அசத்தலாக விளையாடி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு தொடரில் ஒரே ஒரு தோல்வியை மட்டும் தான் பெற்றுள்ளது.
போட்டி குறித்த விவரம் :
18 வது லீக் போட்டி : பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
நேரம் & நாள் : 7:30 p.m & வியாழக்கிழமை
தேதி : 13 ஏப்ரல் 2023
மைதானம் : பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா மைதானம், மொஹாலி.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
வெற்றி கணிப்பு :
ஐபிஎல் 2023 தொடரில் மிரட்டல் அணிகளாக வெற்றிகளை பெற்று வரும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் கடைசியாக தொடரில் விளையாடிய போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது, எனவே இந்த போட்டியில் கட்டாயம் வென்று தங்கள் வெற்றி பயணத்தை தொடர இரு அணிகளும் முழுவீச்சில் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றியை பெற ஒரு போராட்டம் நடைபெறும் என்று கூறினால் மிகையில்லை. இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டியில் வெற்றிக்கான வாய்ப்பு இரு அணிகளும் சம அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிட்ச் அறிக்கை :
இந்த போட்டி நடைபெற உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா மைதானம் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்த உதவும் என்று தெரிய வந்துள்ளது, குறிப்பாக முதல் சில ஓவர்களில் பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருக்கும் என்பதால் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் இந்த பிட்சில் சேஸிங் செய்யும் அணி தான் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது என்று தெரிய வந்துள்ளது, 180 ரன்கள் இலக்காக வைத்தால் கூட எளிதில் சேஸ் செய்து விடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன்: ஷிகர் தவான்
துணை கேப்டன்:ரஷித் கான்
விக்கெட் கீப்பர்: விருத்திமான் சாஹா
பேட்ஸ்மேன்கள் : ஷிகர் தவான், ஷுப்மான் கில், சாய் சுதர்சன், பிர சிம்ரன் சிங், மேத்யூ ஷார்ட்.
ஆல்-ரவுண்டர்கள்: சாம் குர்ரன், ஹர்திக் பாண்டியா
பந்துவீச்சாளர்கள்: ரஷித் கான், முகமது ஷமி, நாதன் எல்லிஸ்
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான ) : ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், மேத்யூ ஷார்ட், ஜிதேஷ் சர்மா (வி.கீ), ஷாருக் கான், சாம் குர்ரான், நாதன் எல்லிஸ், மோஹித் ரதீ, ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான ) : விருத்திமான் சாஹா (வி.கீ), ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா, அபினவ் மனோகர், ரஷித் கான், முகமது ஷமி, அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள்.