பஞ்சாப் vs குஜராத் இடையே வெற்றிக்கான மோதல்..!! பஞ்சாப் அணியில் லிவிங்ஸ்டோன்..?? பாண்டியா கம்பேக்..?? | pbks vs gt 2023 match update

ஐபிஎல் 2023 ஆம் அரங்கில் இன்று ஷிகர் தவான் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜ்ராத் டைட்டன்ஸ் அணிகள் மொஹாலியில் தோல்வியில் இருந்து மீளும் வகையில் வெற்றிக்கான தேடலில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் 2 முறை மோதி இரு அணிகளும் தலா 1 வெற்றிகளை பெற்றுள்ளார்கள். மேலும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் அதிரடி பேட்ஸ்மேன்லியாம் லிவிங்ஸ்டோன் இடம் பெறுவார் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி அதிரடி வீரர்கள் கொண்ட மிரட்டல் அணியாக உள்ளது.மேலும் கடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இடம்பெறாமல் இருந்தார், இந்த போட்டியில் அணியில் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் அரங்கில் இரு அணிகளும் கடைசியாக விளையாடிய போட்டியில் தோல்வியை தழுவி உள்ள நிலையில், கட்டாயம் இந்த போட்டியில் வெற்றி பெற முழுவீச்சில் செயல்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.
இந்த போட்டி நடைபெற உள்ள மொஹாலி மைதானம் பஞ்சாப் அணியின் ஹோம் கிரவுண்ட் ஆகும், மேலும் இங்கு பஞ்சாப் அணி சிறந்த வெற்றி சதவீதம் வைத்துள்ளதால் குஜராத் அணி வெற்றியை பெற அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் குஜராத் அணியில் இளம் வீரர்கள் ஷுப்மான் கில், சாய் சுதர்சன் மற்றும் அனுபவ வீரர் விஜய் சங்கர் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளது அணிக்கு பலம் சேர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தவான் மற்றும் பாண்டியா தங்கள் அணியை மீண்டும் வெற்றி பாதையில் கொண்டு செல்ல முழுவீச்சில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை, எனவே ரசிகர்கள் அனைவரும் ஒரு அதிரடி ஆட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.