குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மிரட்டல் பவுலிங்..!! பஞ்சாப் கிங்ஸ் திணறல்..!! | pbks vs gt 2023 match update

இன்று மொஹாலி உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டார்கள். இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்து பஞ்சாப் கிங்ஸ் அணி முன்னணி வீரர்களை சிதறடித்தது அசத்தியது.
அதாவது இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி துவக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங் 0 (2) மற்றும் ஷிகர் தவான் 8(8) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்கள்.அதன்பின் பஞ்சாப் அணிக்கு ரன்கள் சேர்க்கும் வகையில் சிறப்பாக விளையாடிய மத்தேயு ஷோர்ட் 36(24) ரன்கள் பதிவு செய்து ரஷீத் கான் இடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் குஜராத் அணி பவுலர்களை சமாளிக்க முடியாமல் மிகவும் திணறினார்கள், இந்நிலையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பானுகா ராஜபக்சே 20(26), ஜிதேஷ் ஷர்மா 25 (23), சாம் குர்ரான் 22(22) ஆகியோர் உடனுக்குடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்கள். குஜராத் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய அனுபவ வீரர் மோஹித் சர்மா 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் வழங்கி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இறுதியாக களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் ஷாருக் கான் 22(9) அதிரடியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 153 ரன்களை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இலக்காக பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் கிங்ஸ் அணி அளித்த இலக்கை குஜராத் டைட்டன்ஸ் அணி அடைந்து வெற்றியை பெறுமா ..?? என்பதை பொறுத்திருந்து காண்போம்.