IND VS AUS TEST 2023 : பேட் கம்மின்ஸ் குடும்பத்தில் நேர்ந்த சோகம்..!! சோகத்தில் ஆஸ்திரேலியா வீரர்கள்..!!

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பார்டர் கவாஸ்கர் தொடரில் பாதியில் விலகினார், தவிர்க்க முடியாத குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது பேட் கம்மின்ஸ் குடும்பத்தில் தவிர்க்க முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வரும் நிலையில், முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்த பிறகு ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தொடரில் இருந்து விலகிய நிலையில் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் பேட் கம்மின்ஸ் உடைய தயார் மரியா கம்மின்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அண்மையில் அவர்களது உடல்நிலை மோசமான நிலையில் பேட் கம்மின்ஸ் குடும்பத்துடன் இருக்க தொடரில் இருந்து விலகி ஆஸ்திரேலியா சென்றதாக தெரிய வந்தது, தற்போது பேட் கம்மின்ஸ் உடைய தயார் மரியா கம்மின்ஸ் உடல்நிலை மோசமான நிலையில் இறந்து விட்டதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில், இன்று போட்டியின் 2வது நாள் தொடங்கும் முன் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் உடைய தாயார் உடைய இழப்பிற்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் ஆஸ்திரேலியா வீரர்கள் போட்டியில் கருப்பு நிற பேண்ட் அணிந்து கொண்டு விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக கடந்த 2021 ஆண்டு நியமிக்கப்பட்டார், ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வேகப்பந்து பவுலர் கம்மின்ஸ் தான் முதல் முறையாக ஆஸ்திரேலியா அணிக்கு முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் வேகப்பந்து பவுலர் என்பது குறிப்பிடத்தக்கது.