IND VS AUS TEST 2023 : ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் 11 குறித்து பேட் கம்மன்ஸ் கொடுத்த ஹின்ட்..! முன்னணி வீரர்கள் களமிறங்க வாய்ப்பு.!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை (பிப்ரவரி 17) 2வது டெஸ்ட் போட்டியில் பலப்பரிச்சை மேற்கொள்ள உள்ளார்கள், இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தங்களின் பிளேயிங் லெவன் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை 132 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது, ஆஸ்திரேலியா அணியில் காயம் காரணமாக முக்கிய வீரர்கள் மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிறீன் உள்ளிட்டோர் முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பெறாமல் இருந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி படுதோல்வியை சந்தித்தது என்று செய்திகள் பரவியது.
இந்நிலையில் 2 வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தங்கள் அணியில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறினார். அதாவது காயத்தில் இருந்து மீண்டு உள்ள இரு வரும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.
மேலும் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிறீன் இருவரும் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட முழு உடல் தகுதியை பெற்றால் கண்டிப்பாக அணியில் இணைவார்கள் ஆனால் தற்போது வரை அது குறித்து முடிவு செய்ய படவில்லை என்று கூறினார்.
முதல் டெஸ்ட் போட்டியில் அணியில் இடம் பெறாமல் இருந்த முன்னணி வீரர் டிராவிஸ் ஹெட் கண்டிப்பாக 2வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இருப்பார் என்று கம்மின்ஸ் பதிவு செய்தார், ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 4வது இடத்தில் இருக்கும் ஹெட் வருகையால் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் ஆர்டர் உறுதியாக என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் செய்த தவறுகளை சரி செய்து 2வது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டும் என்பதில் ஆஸ்திரேலியா அணி தீவிரமாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது.