இந்தியாவின் சிறந்த கேப்டன் விராட் கோலி..!! முன்னாள் பாகிஸ்தான் வீரர் பதிவு..!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி உடைய கேப்டன்சி குறித்து சமீபத்தில் பல விமர்சனங்கள் கிரிக்கெட் வட்டாரங்களில் எழுந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கோலிக்கு ஆதரவாக தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக ஏழு ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி வந்த முன்னணி வீரர் விராட் கோலி பல காரணங்களால் 2021 ஆண்டு டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு 2022 ஆண்டு மொத்தமாக கேப்டன் பதவியில் இருந்து விலகினார். தற்போது இந்திய அணியின் முன்னணி வீரர் என்ற முறையில் விராட் கோலி செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் கிரிக்கெட் வட்டாரங்களில் எழுந்த விவாதங்களில் சிலர் இந்திய அணிக்காக விராட் கோலி ஐசிசி கோப்பைகள் எதுவும் பெறாத காரணத்தால் தோல்வி கேப்டனாக விராட் கோலியை விமர்சித்து வருகிறார்கள். இது குறித்து கோலி அண்மையில் ஒரு காணொளி பதிவில் தனது சோகத்தை வெளிப்படுத்தும் விதத்தில் பேசினார், இதையடுத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கோலிக்கு ஆதரவாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக 7 ஆண்டுகள் விராட் கோலி சிறப்பான முறையில் பணியாற்றி உள்ளார், குறிப்பாக இந்திய டெஸ்ட் அணி விராட் கோலி தலைமையில் தான் உலகின் முன்னணி அணிகளை தோற்கடித்து சிறந்த டெஸ்ட் அணியாக வலம் வந்தது என்று கூறினார். இந்திய அணிக்கு எந்த ஐசிசி கோப்பையையும் பெற்று தராத காரணத்திற்காக மட்டும் விராட் கோலி மோசமான கேப்டனாக விமர்சிக்கப்பட்டால், அப்படி கூறுபவர்கள் சிறந்த கிரிக்கெட் நிபுணர்களாக இருக்க முடியாது என்று சல்மான் பட் கூறினார்.
இந்திய அணி விராட் கோலி தலைமையில் தான் உலகின் முன்னணி டெஸ்ட் அணியாக மாறியது, மேலும் விராட் கோலி வெளிநாட்டு மண்ணில் பெற்ற டெஸ்ட் வெற்றிகள் கோலி ஒரு சிறந்த கேப்டன் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு என்று சல்மான் பட் கூறினார். இந்நிலையில் விராட் கோலியின் ரசிகர்கள் இணையத்தில் சாலமன் பட் உடைய பதிவை பகிர்ந்து தங்கள் ஆதரவை அளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.