பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இன்று ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே மதியம் 2 மணிக்கு ICC கிரிக்கெட் உலகக் கோப்பை 2வது ODI போட்டி தொடங்கியது. முதல் இன்னிங்ஸ் முடிவில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது. எனவே, நெதர்லாந்து 287 ரன் இலக்குடன் அடுத்து விளையாட ஆரம்பித்தது.
நெதர்லாந்து அணி பேட்டிங்
நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் விக்ரம்ஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓ'டவுட் தங்களின் ஆட்டத்தை தொடங்கினர். ஆயினும் 5வது ஓவரில் மேக்ஸ் ஓ'டவுட் (5) ஆட்டமிழந்தார். அவருக்கு பின்னர் பாஸ் டி லீடே களமிறங்க நெதர்லாந்து அணி வேகமாக ரன்களை குவிக்க ஆரம்பித்தது. அந்த சமயத்தில் கொலின் அக்கர்மேன் (17) 11வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து விக்ரம்ஜித் சிங் (52), தேஜா நிடாமனுரு (5), ஸ்காட் எட்வர்ட்ஸ் (0), சாகிப் சுல்பிகர் (10), ரோலோஃப் வான் டெர் மெர்வே (4), லோகன் வான் பீக் (28) ரன்களில் ஆட்டமிழந்தனர். இரண்டாவது இன்னிங்ஸ் இறுதியில் ஆர்யன் தத் (1) ஆட்டமிழந்து, பால் வான் மீகெரென் (7) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நெதர்லாந்து அணி 41 ஓவரில் 10 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளனர். பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நெதர்லாந்து அணியை தங்களின் பந்து வீச்சால் மிரள வைத்தனர் பாகிஸ்தான் அணியினர். ஹரிஸ் ரவூப்(3), ஹசன் அலி் (2), இப்திகார் அகமது (1), முகமது நவாஸ் (1) விக்கெட்டுகள் எடுத்து அணியை வெற்றியடைய செய்தனர்.