ஐபிஎல் தொடரில் அதிரடி பேட்டிங் செய்து ஆரஞ்சு கேப் பெற்றவர்கள் பட்டியல்..!! | ipl orange cap winners list

இந்தியாவின் முக்கிய தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவும் முன்னணி வீரர்களில் அதிக ரன்கள் பதிவு செய்து முதல் இடத்தில் உள்ள வீரர் தான் ஆரஞ்சு கேப்பை வெல்வார், இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு கேப் வென்றவர்கள் பட்டியல் பற்றி காண்போம்.
ஆரஞ்சு கேப் விளக்கம் :
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் தலா ஒரு போட்டி முடிந்த பிறகு, தொடரில் அதிக ரன்கள் பெற்ற வீரருக்கு ஆரஞ்சு கேப் ஆரஞ்சு கேப் வழங்கப்படும். அதன்பின் தொடரில் அதிக ரன்கள் பெரும் வீரருக்கு ஆரஞ்சு கேப் மாறிக்கொண்டே இருக்கும் இறுதியாக தொடரின் முடிவில் அதிக ரன்களை பதிவு செய்துள்ள வீரருக்கு ஆரஞ்சு கேப் உடன் பரிசு தொகை வழங்கப்பட்டு பெருமைப்படுத்த படுவர்.
ஐபிஎல் தொடரில் முதல் முறை ஆரஞ்சு கேப் பெற்றவர் :
ஐபிஎல் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் நிலையில், முதல் முறையாக நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணியை சேர்ந்த வீரர் ஷான் மார்ஷ் 11 போட்டிகளில் 616 ரன்கள் பதிவு செய்து ஆரஞ்சு கேப் வென்று அசத்தினார்.
ஆரஞ்சு கேப் பெறுவதில் சாதனை :
ஐபிஎல் தொடரில் அதிக முறை ஆரஞ்சு கேப் பெற்ற பெருமைக்கு சொந்தக்காரர் டேவிட் வார்னர், குறிப்பாக 3 முறை ஆரஞ்சு கேப் வென்று அசத்தியுள்ளார். இதுவரை ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் முறையே,
வருடம் |
ரன்கள் |
2015 |
562 |
2017 |
641 |
2019 |
692 |
ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 2 வருடங்கள் ஆரஞ்சு கேப் பெற்ற பெருமைக்கு சொந்தக்காரர் கிறிஸ் கெயில், முறையே 2011 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் வென்று அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் பெற்று ஆரஞ்சு கேப் பெற்ற பெருமைக்குரிய வீரர் விராட் கோலி, அதாவது 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விராட் கோலி 973 ரன்கள் பெற்று அசத்தினார், ஒரு தொடரில் அதிக ரன்கள் பெற்று ஆரஞ்சு கேப் பெற்ற விராட் கோலி சாதனை இன்று வரை முறியடிக்க படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர் 863 ரன்கள் பதிவு செய்து ஆரஞ்சு கேப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு கேப் பெற்றவர்கள் பட்டியல் :
எண் |
பிளேயர் |
அணி |
வருடம் |
ரன்கள் |
போட்டி |
அதிகபட்ச ரன் |
ஸ்ட்ரைக் ரேட் |
1 |
ஜோஸ் பட்லர் |
ராஜஸ்தான் ராயல்ஸ் |
2022 |
863 |
17 |
116 |
149.05 |
2 |
ருதுராஜ் கெய்க்வாட் |
சென்னை சூப்பர் கிங்ஸ் |
2021 |
635 |
16 |
101* |
136.26 |
3 |
கே.எல்.ராகுல் |
கிங்ஸ் XI பஞ்சாப் |
2020 |
670 |
14 |
132* |
129.34 |
4 |
டேவிட் வார்னர் |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
2019 |
692 |
12 |
100 |
143.87 |
5 |
கேன் வில்லியம்சன் |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
2018 |
735 |
17 |
84 |
142.44 |
6 |
டேவிட் வார்னர் |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
2017 |
641 |
14 |
126 |
141.81 |
7 |
விராட் கோலி |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
2016 |
973 |
16 |
113 |
152.03 |
8 |
டேவிட் வார்னர் |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
2015 |
562 |
14 |
91 |
156.54 |
9 |
ராபின் உத்தப்பா |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
2014 |
660 |
16 |
83 |
137.78 |
10 |
மைக்கேல் ஹசி |
சென்னை சூப்பர் கிங்ஸ் |
2013 |
733 |
17 |
95 |
129.5 |
11 |
கிறிஸ் கெயில் |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
2012 |
733 |
14 |
128 |
160.74 |
12 |
கிறிஸ் கெயில் |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
2011 |
608 |
12 |
107 |
183.13 |
13 |
சச்சின் டெண்டுல்கர் |
மும்பை இந்தியன்ஸ் |
2010 |
618 |
15 |
89 |
132.61 |
14 |
மேத்யூ ஹைடன் |
சென்னை சூப்பர் கிங்ஸ் |
2009 |
572 |
12 |
89 |
144.81 |
15 |
ஷான் மார்ஷ் |
கிங்ஸ் XI பஞ்சாப் |
2008 |
616 |
11 |
115 |
139.68 |