நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
![நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது](https://www.sportspartans.com/assets/uploads/news-2413.jpg)
இன்று எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சேப்பாக்கம், சென்னை ஸ்டேடியத்தில் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மதியம் 2 மணிக்கு `11வது ODI உலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.. முதல் இன்னிங்ஸ் முடிவில் பங்களாதேஷ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது. எனவே, நியூசிலாந்து 246 ரன் இலக்குடன் அடுத்து விளையாட ஆரம்பித்தது.
நியூசிலாந்து அணி பேட்டிங்
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரன் தங்களின் ஆட்டத்தை தொடங்கினர். ஆயினும் 2வது ஓவரில் ரச்சின் ரவீந்திரன் (79) ஆட்டமிழந்தார். அவருக்கு பின்னர் கேன் வில்லியம்சன் களமிறங்க நியூசிலாந்து அணி வேகமாக ரன்களை குவிக்க ஆரம்பித்தது. அந்த சமயத்தில் டெவோன் கான்வே (45) 20வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து கேன் வில்லியம்சன் (78) காயம் காரணமாக வெளியேறினார். டேரில் மிட்செல் (89) , க்ளென் பிலிப்ஸ் (16) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நியூசிலாந்து அணி 42.5 ஓவரில் 10 விக்கெட்டை இழந்து 248 ரன்கள் எடுத்துள்ளனர். நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முஸ்தாபிசுர் ரஹ்மான் (1), ஷகிப் அல் ஹசன் (1) விக்கெட்டுகள் எடுத்தனர்.