ஐபிஎல் 2023 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் நிதிஷ் ராணா..!! அறிவிப்பு வெளியானது..!! | kkr captain 2023

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஐபிஎல் 2023 ஆம் தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியான நிலையில், கொல்கத்தா அணியை இந்த தொடரில் வழிநடத்த புதிய கேப்டனாக நிதிஷ் ராணா அணி நிர்வாகம் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் மார்ச் 31 ஆம் தேதி ஆரம்பமாக உள்ள நிலையில் பல முன்னணி வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்கள், அந்த வரிசையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு பகுதியில் ஏற்பட்ட திடீர் வலி காரணமாக தொடரில் இருந்து தற்காலிமாக விலகுகிறார் என்று தகவல் வெளியானது.
இதனை அடுத்து கொல்கத்தா அணியை ஐபிஎல் 2023 ஆம் தொடரில் வழிநடத்த அணி நிர்வாகம் சார்பில் இடது கை அனுபவ வீரர் நிதிஷ் ராணா தற்போதைய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்று முன்னணி அணியாக விளங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வழிநடத்த அணியின் முன்னணி வீரர்கள் ஆண்ட்ரே ரசல், சுனில் நரேன் , டிம் சவுதீ நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.
இந்நிலையில் வெளிநாட்டு வீரர்களை தவிர்த்துவிட்டு அணி நிர்வாகம் இந்திய வீரர் நிதிஷ் ராணா தற்காலிகமாக அணியை வழிநடத்துவார் என்று அறிவித்துள்ளனர், மேலும் தற்போது ஓய்வில் உள்ள ஸ்ரேயாஸ் ஐயர் தொடரின் பாதியில் அணிக்காக களமிறங்குவார் என்று அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் 2018 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள நிதிஷ் ராணா அதிரடி ஆட்டத்துக்கு பேர் போன வீரர், அனைத்து தொடர்களிலும் முக்கிய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொல்கத்தா அணிக்கு வெற்றிகளை பெற்று தந்துள்ளார். மேலும் டெல்லி அணியை உள்நாட்டு தொடர்களில் வழிநடத்தி உள்ளதால் கேப்டனாகவும் அனுபவம் ராணாவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏப்ரல் 1 ஆம் தேதி தனது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மொஹாலியில் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.