ஐ.பி.எல் 2023 : நிக்கோலஸ் பூரன் காட்டில் பணமழை..! லக்னோ அணியின் காஸ்ட்லி பிக்..!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 23, 2022 & 20:08 [IST]

Share

IPL 2023 : மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த விக்கெட்கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேனான நிக்கோலஸ் பூரன் ஐ.பி.எல் ஏலத்தில் 16-கோடிக்கு  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சார்பில் வாங்கப்பட்டார்.

கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் தொடரில் புதிய அணியாக களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கே.எல்.ராகுல் தலைமையில் சிறப்பாக பங்களித்து பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்று எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர் அணியிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

லக்னோ அணி கடந்த ஆண்டு நடந்த தொடரில் ஆட்டத்தின் நடுவில் இறங்கி  போட்டியின் போக்கை மாற்றும்  ஒரு அதிரடி வீரர் தங்கள் அணியில் இல்லாமல் பல போட்டிகளில் வெற்றியை தவறவிட்டது. அந்த குறையை போக்கும் வகையில் நடக்கவிருக்கும் ஏலத்தில் ஒரு அதிரடி பேட்ஸ்மேனை வாங்க முடிவு செய்தது.

இந்நிலையில் நிக்கோலஸ் பூரனை ஏலத்தில் அறிவித்த உடனே இறுதிவரை போராடி 16-கோடிக்கு அவரை தங்கள் அணிக்காக வாங்கியது. நிக்கோலஸ் பூரன் ஒரு அசத்தலான பீல்டர் மேலும் அசால்ட்டாக பல சிக்ஸர்களை அடித்து ஒரே ஒவேரில் போட்டியின் நிலையை தன் அணிக்கு சாதகமாக மாற்றும் திறன் கொண்ட வீரர் ஆவார்.

அண்மையில் நடந்து முடிந்த அபுதாபி டி10 லீகில் நிக்கோலஸ் பூரன் 10 போட்டிகளில் 345 ரன்களை அடித்து அந்த தொடரின் நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது திறனை பார்த்தே லக்னோ அணி இவரை போட்டிபோட்டு தங்கள் அணிக்காக வாங்கினார்கள் என்பது உறுதி.     

இதுவரை ஐ.பி.எல்  டி-20 போட்டிகளில் நிக்கோலஸ் பூரன் பங்களிப்பு :

போட்டிகள்       : 47

ரன்கள்               : 912

அதிக ரன்          : 77

ஸ்ட்ரைக் ரேட்  : 151.24

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2023-ஆம் ஆண்டு நடக்கும் தொடரில் கண்டிப்பாக வெற்றி அடைய வேண்டும் என்ற முனைப்பில் அனைத்து விதத்திலும் தயாராவது தெளிவாக தெரிகிறது. இந்த வருடத்தில் நல்ல பார்மில் இருக்கும் நிக்கோலஸ் பூரனின் அதிரடி ஆட்டத்தை காண காத்திருப்போம்.