ஐபிஎல் 2023 தொடரில் நிக்கோலஸ் பூரான் வேகமாக அரைசதம் பதிவு செய்து சாதனை..!! | nicholas pooran 2023 ipl fastest 50

ஐபிஎல் 2023 அரங்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக லக்னோ அணி வீரர் நிக்கோலஸ் பூரான் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார், குறிப்பாக அதிவேக அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டார்கள், ஐபிஎல் வரலாற்றில் மறக்க முடியாத முக்கிய போட்டியாக இந்த போட்டி பதிவானது என்று கூறினால் மிகையில்லை. பெங்களூர் அணி பவுலர்களை நாலா பக்கமும் சிதறடித்து சிக்ஸர் மழை பொழிந்தார்.
இதன்மூலம் ஐபிஎல் 2023 ஆம் அரங்கில் 15 பந்துகளில் அரைசதம் கடந்தார், குறிப்பாக பெங்களூர் பவுலர் வெய்ன் பார்னெல் வீசிய 16 வது ஓவரில் இந்த சாதனையை படைத்தார். இதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அஜிங்கிய ரஹானே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வான்கடே மைதானத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 19 பந்துகளில் அரைசதம் பதிவு செய்தது தான் 2023 ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதமாக பதிவாகி இருந்த நிலையில், தற்போது நிக்கோலஸ் பூரான் அந்த சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடர் வரலாற்றில் லக்னோ அணி கேப்டன் கே எல் ராகுல் மற்றும் கொல்கத்தா அணி வீரர் பேட் கம்மின்ஸ் இருவரும் 14 பந்துகளில் அரைசதம் பெற்றது தான் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து பதிவு செய்யப்பட்ட சாதனையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஐபிஎல் 2023 தொடரில் அதிவேக அரைசதம் பதிவு செய்த வீரர்கள் பட்டியல் :
எண் |
பிளேயர் |
அரைசதம் |
அணி |
எதிரணி |
1 |
நிக்கோலஸ் பூரான் |
15 பந்துகளில் |
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
2 |
அஜிங்க்யா ரஹானே |
19 பந்துகளில் |
சென்னை சூப்பர் கிங்ஸ் |
மும்பை இந்தியன்ஸ் |
3 |
ஷர்துல் தாக்கூர் |
20 பந்துகளில் |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
4 |
விஜய் சங்கர் |
21 பந்துகளில் |
குஜராத் டைட்டன்ஸ் |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
5 |
கைல் மேயர்ஸ் |
21 பந்துகளில் |
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் |
சென்னை சூப்பர் கிங்ஸ் |