NZ VS SL TEST 2023 : நியூசிலாந்து அணி திரில் வெற்றி..!! இந்திய அணிக்கு அடித்த ஜாக்பாட் ..!!

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற போட்டி போட்டு கொண்டிருந்த நிலையில், நியூசிலாந்து அணி இலங்கையை முதல் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி இந்திய அணி தகுதி பெற உதவியது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற நியூசிலாந்து அணிக்கு எதிராக உள்ள 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் இருந்தது, அப்படி இலங்கை அணி வெற்றி பெற்றால் இந்திய அணியை புள்ளிகளில் பின் தள்ளி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற வகையில் வாய்ப்புகள் இருந்தது.
இந்நிலையில் விறுவிறுப்பாக சென்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5 வது நாள் ஆட்டத்தில் 257 ரன்கள் இலங்கை அணி சார்பில் இலக்காக இருந்தது, இந்த 5வது நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் போட்டியில் முதல் செஷன் நடைபெறவில்லை. அதன்பின் தொடங்கிய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கேன் வில்லியம்சன் அசத்தினார்.
இந்த போட்டியில் தனி ஒருவராக போராடிய வில்லியம்சனுக்கு ஆதரவாக களமிறங்கிய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டேரில் மிட்செல் முக்கியமான தருணத்தில் 81(86) பெற்று உதவினார்.இதையடுத்து களமிறங்கிய வீரர்கள் உடனுக்குடன் ஆட்டமிழக்க போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது, குறிப்பாக போட்டியின் கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை பட்ட போது வில்லியம்சன் பவுண்டரி அடித்து கடைசி 2 பந்தில் 1 ரன் பெற வேண்டிய நிலைக்கு எடுத்துச் சென்றார்.
இந்த போட்டியின் இறுதிப் பந்தில் ரன் அவுட் ஆவதை தவிர்த்து துரிதமாக செயல்பட்டு வில்லியம்சன் பைஸ் மூலம் 1 ரன் பெற்று நியூஸிலாந்து அணிக்கு வெற்றி பெற்று தந்து அசத்தினார், இறுதி வரை ஆட்டமிழக்காமல் வில்லியம்சன் 121*(194) ரன்கள் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பு பறிபோன நிலையில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது, இந்த போட்டி டிராவை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்த நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் 4வது டெஸ்ட் போட்டியின் முடிவு எப்படி இருந்தாலும் இந்திய அணியை பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.