இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து டி20 அணி அறிவிப்பு.. கேப்டனாக மூத்த ஆல்-ரவுண்டர் நியமனம்!!

Representative Image. Representative Image.

By Sekar Published: January 13, 2023 & 10:51 [IST]

Share

இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 ஐ தொடருக்கு இந்த மாதம் இந்தியா வரும் நியூசிலாந்து அணிக்கு மூத்த ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட அணியில் இடது கை ஸ்விங் பந்துவீச்சாளர் பென் லிஸ்டர் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜனவரி 18 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முடிவில் நியூசிலாந்து ஜனவரி 27 ஆம் தேதி ராஞ்சியில் முதல் டி20 ஐ விளையாடுகிறது.

கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நியூசிலாந்து ஏ அணியில் அறிமுகமான பிறகு லிஸ்டர் தற்போது அந்நாட்டு தேசிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதே சமயம் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து ஒன்பது வீரர்கள் உட்பட, அனுபவம் வாய்ந்த டி20 வீரர்களுடன் சான்ட்னர் தலைமையில் நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டுக்கு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமான ஆல்-ரவுண்டர் ஹென்றி ஷிப்லி மற்றும் கடந்த ஆண்டு ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் போது ஸ்காட்லாந்துக்கு எதிராக அறிமுகமான லெக்-ஸ்பின்னர் மைக்கேல் ரிப்பன் ஆகியோரும் இந்தியாவுக்கு எதிரான டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாப் கார்ட்டர் (பேட்டிங்), பால் வைஸ்மேன் (பந்துவீச்சு) மற்றும் ட்ரெவர் பென்னி (நான்காவது பயிற்சியாளர்) ஆகியோருடன் லூக் ரோஞ்சி அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பார்.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி

மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேன் கிளீவர், டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், பென் லிஸ்டர், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் ரிப்பன், ஹென்றி ஷிப்லி, இஷ் சோதி, பிளேர் டிக்.