இந்தியா தொடரில் பங்கேற்க வேண்டாம்.. பிரபல வேகப்பந்து வீச்சாளருக்கு நியூஸி. கிரிக்கெட் வாரியம் முட்டுக்கட்டை!!

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தங்களது ஒருநாள் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பிளேர் டிக்னரை சேர்த்துள்ளது.
சமீபத்தில் நியூசிலாந்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான தனது சொந்தத் தொடரில் மில்னே காயமடைந்த நிலையில், அவர் இன்னும் குணமாகாததால் இந்த மாற்றம் நடந்துள்ளது. நியூசிலாந்தின் ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக தலா மூன்று போட்டிகள் இடம்பெற்றுள்ளன.
இது குறித்து மில்னேவுடன் விரிவான கலந்தாலோசனைக்கு பிறகே நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வேகப்பந்து வீச்சாளர் பிளேர் டிக்னரை நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இது முடிந்த பிறகு பாகிஸ்தானுடன் ஒருநாள் தொடரில் ஜனவரி 9 ஆம் தேதி முதல் பங்கேற்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்குப் பிறகு, நியூசிலாந்து அணி ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கும் மற்றொரு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக இந்தியாவுக்கு வர உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி:
கேன் வில்லியம்சன் (கேப்டன் - பாகிஸ்தான் ஒருநாள் போட்டிகளுக்கு மட்டும்), டாம் லாதம் (கேப்டன் - இந்திய ஒருநாள் போட்டிகள்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன் (இந்திய ஒருநாள் போட்டிகள் மட்டும்), டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி (இந்திய ஒருநாள் போட்டிகள் மட்டும்), லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி , டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், ஹென்றி ஷிப்லி, இஷ் சோதி, டிம் சவுத்தி (பாகிஸ்தான் ஒருநாள் போட்டிகள் மட்டும்), பிளேர் டிக்னர்.