ENG VS NZ TEST 2023 : 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!! ரசிகர்கள் கொண்டாட்டம் .!!

நியூசிலாந்து மண்ணில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி மிரட்டல் வெற்றி பெற்று சர்வதேச டெஸ்ட் அரங்கில் அசத்தியுள்ளது.
இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற நிலையில் முன்னிலை வகித்தது, அதனை தொடர்ந்து நடைபெற்ற 2வது டெஸ்ட் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் இமாலய இலக்கை அடைந்தது. முதல் இன்னிங்ஸில் 435 ரன்கள் பதிவு செய்து டிக்ளேர் செய்தது. அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி மிகவும் தடுமாறி 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி சார்பில் நியூஸிலாந்து அணிக்கு பாலோ ஆன் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்கள், குறிப்பாக டாம் லதாம் 83(172) ரன்கள், கேன் வில்லியம்சன் 132(282) ரன்கள் பெற்று இங்கிலாந்து அணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார்கள்.
இந்நிலையில் இறுதியாக நியூசிலாந்து அணி 483 ரன்கள் 2வது இன்னிங்ஸில் பதிவு செய்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு 258 ரன்கள் இலக்காக வழங்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மிகவும் திணறியது தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடி வீரர் ஹார்ரி புரூக் டக் அவுட் ஆன நிலையில் முன்னணி வீரர் ஜோ ரூட் 95(118) ரன்கள் பெற்று அணியின் நிலையை சரி செய்தார்.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 57 ரன்கள் மட்டும் தேவை என்ற நிலையில், தனது சிறப்பான பவுலிங் மூலம் நீல் வாக்னர் முன்னணி வீரர்கள் விக்கெட்களை பெற்று நியூஸிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பை வழங்கினார், இறுதியாக இங்கிலாந்து அணி வெற்றி பெற 2 ரன்கள் தேவை பட்ட நேரத்தில் நீல் வாக்னர் உடைய பந்தில் அன்டேர்சன் ஆட்டமிழந்த நிலையில் நியூசிலாந்து அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் போராடி பாலோ ஆன் வழங்கிய பிறகு இறுதி வரை போராடி திரில் வெற்றி பெற்று சர்வதேச டெஸ்ட் அரங்கில் சாதனை படைத்து அசத்தியது, இந்த வெற்றியின் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது நியூசிலாந்து அணி என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டியில் பாலோ ஆன் அளிக்கப்பட்ட பிறகு அந்த அணி வெற்றி பெறுவது மிகவும் அரிதான விஷயம் என்பதால் கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் நியூசிலாந்து அணி உடைய வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.