NZ Vs NED 1st Innings: நெதர்லாந்து அணிக்கு 323 ரன்கள் இலக்கு
![NZ Vs NED 1st Innings: நெதர்லாந்து அணிக்கு 323 ரன்கள் இலக்கு](https://www.sportspartans.com/assets/uploads/news-2402.jpg)
இன்று ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கம், உப்பல், ஹைதராபாத் ஸ்டேடியத்தில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே மதியம் 6 மணிக்கு 5வது ODI உலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணி பேட்டிங்
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டெவோன் கான்வே மற்றும் வில் யங் அமர்க்களமாக தங்களின் ஆட்டத்தை தொடங்கினர். ஆயினும் 12.வது ஓவரில் டெவோன் கான்வே (32) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரச்சின் ரவீந்திரன் களமிறங்க நியூசிலாந்து மெதுவாக ரன்களை எடுக்க தொடங்கியது. அப்போது வில் யங் (70) 26வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். பிறகு டேரில் மிட்செல் அணியின் வெற்றிக்காக பேட் செய்ய தொடங்கினார். வில் யங் தொடர்ந்து ரச்சின் ரவீந்திரன் (51), டேரில் மிட்செல் (48), டாம் லாதம் (53), க்ளென் பிலிப்ஸ் (4), மார்க் சாப்மேன் (5). போட்டியின் இறுதியில் மிட்செல் சான்ட்னர் (36), மாட் ஹென்றி (10) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 322 ரன்கள் எடுத்துள்ளனர். போட்டியின் முதல் இன்னிங்ஸில் பால் வான் மீகெரென் (2), ரோலோஃப் வான் டெர் மெர்வே (3), ஆர்யன் தத்(2), பாஸ் டி லீடே(1) விக்கெட்ட்டுகள் எடுத்தனர்.