IND VS AUS TEST 2023 : பார்டர் கவாஸ்கர் தொடரில் நாதன் லியோன் அசத்தல்..!! புதிய சாதனை..!!

பார்டர் கவாஸ்கர் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பௌலர் நாதன் லியோன் புதிய மைல்கல்லை அடைந்து அசத்தினார்.
இந்த 3 வது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை தனது அசத்தல் சுழல் பவுலிங் மூலம் சுருட்டிய நாதன் லியோன் பல முன்னாள் வீரர்கள் சாதனைகளை முறியடித்து டெஸ்ட் அரங்கில் புதிய மைல்கல்லை அடைந்தார்.
இந்த போட்டியில் 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா 12(33), சுப்மன் கில் 5(15), ரவீந்திர ஜடேஜா 7(36), விராட் கோலி 13(26) ஆகியோரின் விக்கெட்டுகளை வேகமாக கைப்பற்றி இந்திய அணியின் பேட்டிங்கை சிதறடித்தார். இந்திய அணிக்காக தனி ஒருவனாக போராடி வந்த செதேஷ்வர் புஜாரா 59 (142) உடைய விக்கெட்டையும் கைப்பற்றி இந்திய அணிக்கு முடிவு காட்டினார்.
ஆஸ்திரேலியா அணிக்கு உதவும் வகையில் நாதன் லியோன் 8 விக்கெட்டுகளை பெற்று தந்தார், இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் முன்னாள் ஸ்பின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் உடைய சாதனையை முறியடித்தார் நாதன் லியோன் அசத்தினார். அதாவது இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் அரங்கில் லியோன் 113 விக்கெட்களை பெற்றுள்ளார்.
சர்வதேச டெஸ்ட் அரங்கில் முரளிதரன் இந்தியாவுக்கு எதிராக 25 டெஸ்ட் போட்டிகளில் 105 விக்கெட்டுகளை பெற்று சாதனை பட்டியலில் முதல் இடத்தில் இருந்த நிலையில், தற்போது நாதன் லியோன் முதலிடம் பிடித்துள்ளார். இதே போட்டியில் நாதன் லியோன் 9வது முறையாக 5 விக்கெட்டுகளை பெற்று அசத்தினார்.இதன் மூலம் இந்திய அணியின் டெஸ்ட் ஜாம்பவான் அணில் கும்ளே உடைய நீண்ட நாள் சாதனையையும் முறியடித்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக விக்கெட்டுகள் பெற்ற வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் முன்னாள் வீரர் அணில் கும்ளே 20 போட்டிகளில் 111 விக்கெட்களை பெற்று முதல் இடத்தில் இருந்த நிலையில், தற்போது நாதன் லியோன் 113 விக்கெட்களை பெற்று கும்ப்ளே சாதனையை முறியடித்து பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக விக்கெட்டுகளை பெற்றவர் என்ற பெருமையை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.