IND VS AUS TEST 2023 : தொடங்கியது 4வது டெஸ்ட் போட்டி.!! இரு நாட்டு பிரதமர்கள் பங்கேற்பு.!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரின் இறுதி மற்றும் 4வது டெஸ்ட் போட்டியை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர்கள் பங்கேற்று தொடங்கி வைத்தார்கள்.இந்த டெஸ்ட் போட்டி வரலாற்று சிறப்பிக்க போட்டியாக பிரதமர்கள் பங்கேற்பு மூலம் மாறியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையில் கடந்த 75 ஆண்டுகளாக இருந்து வரும் நல்ல நட்புறவை சிறப்பு படுத்தும் வகையில், இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கிய பார்டர் கவாஸ்கர் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியை இந்திய நாட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இருவரும் கலந்து கொண்டு தொடங்கி வைத்து பார்வையாளர்களாக இடம்பெற்று கண்டு கழித்து வருகிறார்கள்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் இரு நாட்டு பிரதமர்களுடன் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா பங்கேற்றனர் மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி போட்டி தொடங்கும் முன் டெஸ்ட் கேப் வழங்கி சிறப்பித்தார், அதேபோல் ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்திற்கு ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் டெஸ்ட் கேப் வழங்கினார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது, தற்போதைய நிலையில் 2 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா அணி 73 ரன்கள் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த போட்டி நடைபெறும் மைதானம் சற்று பேட்டிங் செய்ய உதவுவதால் டாஸ் இழந்த இந்திய அணி ஆஸ்திரேலியா வீரர்கள் விக்கெட்களை பெற பெரிதும் முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.