டாஸ் வென்ற மும்பை அணி.. பந்துவீச்சு தேர்வு.. பிளேயிங் லெவன் அப்டேட்.. | IPL 2023 MI vs KKR Toss Update

ஐபிஎல் 2023 தொடரின் 22வது லீக் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் குறித்த விவரங்களை பற்றி பார்க்கலாம்.
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது. அந்த ஒரு வெற்றியும் இந்த தொடரில் இன்னும் ஒரு வெற்றியைக் கூட பெறாத டெல்லி அணியை வீழ்த்தி தான் பெற்றது.
அதேபோல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பொறுத்தவரை இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிரட்டல் வெற்றிகளை பெற்று அசத்தி வருகிறது, மற்ற அணிகளை துவம்சம் செய்யும் அதிரடி அணியாக வலம் வருகிறது. ஆனால் கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார், எனவே நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் செய்ய உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்: இஷான் கிஷன்(வி.கீ), கேமரூன் கிரீன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), டிம் டேவிட், நேஹால் வதேரா, அர்ஜுன் டெண்டுல்கர், ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, டுவான் ஜான்சன், ரிலே மெரிடித்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்: ரஹ்மானுல்லா குர்பாஸ்(வி.கீ), வெங்கடேஷ் ஐயர், என் ஜெகதீசன், நிதிஷ் ராணா(கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், லாக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி.