மும்பைக்கு சாதகமா விழுந்த டாஸ்.. மும்பையின் வெற்றியை தடுக்குமா பஞ்சாப்.. | MI vs PBKS IPL 2023 Toss Update

ஐபிஎல் 2023 தொடரின் 31 வது லீக் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை, சாம் குர்ரான் தலைமையிலானபஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்க்கொள்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் குறித்த விவரங்களை பற்றி பார்க்கலாம்.
மும்பை அணியை பொறுத்தவரை ஐபிஎல் 2023 தொடரை தோல்விகளோடு தொடங்கினாலும், அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
அதேபோல், பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை இதுவரை 6 போட்டிகளில் விளையாடி, 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அந்தவகையில், கொல்கத்தா, ராஜஸ்தான், லக்னோ அணிகளுக்கு எதிராக வெற்றியும், ஐதராபாத், குஜராத், பெங்களூர் அணிகளுக்கு எதிராக தோல்வியையும் சந்தித்துள்ளது. இதன் மூலம் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். எனவே சாம் குர்ரான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்: ரோஹித் ஷர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (வி.கீ), சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட், அர்ஜுன் டெண்டுல்கர், நேஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டாஃப்.
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்: அதர்வா டைடே, பிரப்சிம்ரன் சிங், மேத்யூ ஷார்ட், லியாம் லிவிங்ஸ்டோன், ஹர்ப்ரீத் சிங் பாட்டியா, சாம் குர்ரான் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (வி.க), ஷாருக் கான், ஹர்ப்ரீத் ப்ரார், நாதன் எல்லிஸ், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர்.