WPL 2023 : ஹர்மன்பிரீத் கவுர் அதிரடி ஆட்டம் ..!! மும்பை அணியின் வெற்றி பயணம் தொடர்கிறது..!!

இந்திய மண்ணில் முதல் முறையாக நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் தோல்வியே சந்திக்காத அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி திகழ்கிறது, நேற்றைய 10 லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அசத்தல் வெற்றி அடைந்து தனது வெற்றி பயணத்தை மும்பை அணி தொடர்கிறது.
இந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் கேப்டன் ஹர்மன் ப்ரீட் சிங் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மும்பை இந்தியன்ஸ் அணி நேற்றைய லீக் சுற்று போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தியது. அதாவது இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி 58(46)அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் அணி பிளேயர்கள் உடனுக்குடன் ஆட்டமிழந்த நிலையில், சற்று பொறுப்புடன் விளையாடிய அணியின் ஆல்ரவுண்டர் தஹ்லியா மெக்ராத் 50(37) தனது அரை சதத்தை பதிவு செய்தார்.இந்நிலையில் உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் பதிவு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை ஹேலி மேத்யூஸ் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தார், இந்நிலையில் அடுத்து ஜோடி சேர்ந்த அணியின் வீராங்கனைகள் யாஸ்திகா பாட்டியா மற்றும் நாட் ஸ்கிவர்-பிரண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
அதன்பின் யாஸ்திகா பாட்டியா 42(27)ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 53*(33) அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியை பெற்று தந்தார். இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி மகளிர் பிரீமியர் லீக் தொடரில் தோல்வியே சந்திக்காத அணியாக வலம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக வழி நடத்தி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு வழிவகுத்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டநாயகி விருதை வென்றார், மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.