WPL 2023 : முதல் வெற்றியை பதிவு செய்யுமா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ..?? மும்பை இந்தியன்ஸ் அதிரடி தொடருமா..??

இந்தியாவில் முதல் முறையாக நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் மோத உள்ளார்கள். இந்த இரு அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடரில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் அசத்தல் வெற்றி பெற்று மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கு ஒரு சிறப்பான ஆரம்பத்தை அளித்தது, மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது முதல் போட்டியில் படுதோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில் மும்பை அணியை பொறுத்தவரை தனது வெற்றி பயணத்தை தொடர முயற்சிக்கும், அதே சமயத்தில் பெங்களூர் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்ய முயலும் என்பதால் இந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் போட்டி குறித்த விவரங்கள் :
4 வது லீக் போட்டி : மும்பை இந்தியன்ஸ் VS ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
நேரம் & நாள் : 7:30 P.M (IST) & திங்கட்கிழமை.
மைதானம் : பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை.
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : ஹெய்லி மேத்யூஸ், யஸ்திகா பாட்டியா(வி.கீ ), ஹர்மன்பிரீத் கவுர்(கேப்டன்), நாட் ஸ்கிவர்-பிரண்ட், அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரகர், ஹுமைரா காசி, இஸ்ஸி வோங், ஜிந்திமணி கலிதா, சைகா இஷாக்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேயிங் லெவன் (தோராயமான) : ஸ்மிருதி மந்தனா(கேப்டன்), சோஃபி டேவின், ஹீதர் நைட், திஷா கசட், எலிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ்(வி.கீ), கனிகா அஹுஜா, ஆஷா ஷோபனா, ப்ரீத்தி போஸ், மேகன் ஷட், ரேணுகா தாக்கூர் சிங்.