ஐ.பி.எல் 2023: மும்பை இந்தியன்ஸ் அணியின் மிரட்டல் பிளேயிங் -11 வெளியானது ..? ரசிகர்கள் கொண்டாட்டம் ..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: December 26, 2022 & 14:53 [IST]

Share

ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் 17.5 கோடிக்கு ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் கிரீனை வாங்கியது,இது ஐ.பி.எல் மினி ஏலத்தில் இரண்டாவது அதிகப்படியான விலையாகப் பதிவானது.அதன்பின்  ஏலத்தில் அணிக்காக மொத்தமாக 8 புதிய வீரர்களை வாங்கியது மும்பை  அணி.

ஐ.பி.எல் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆண்டு நடந்த தொடரில் படுதோல்வியடைந்து வெளியேறியது,இதனைச் சரி செய்யும் விதமாக அணியில் பல மாற்றங்களைச் செய்து பல முன்னனி வீரர்களை விடுவித்தது.

அதனை தொடர்ந்து ஏலத்தில் சிறப்பாகச் செயல்பட்டு அணியில் காலியாக இருந்த இடங்களுக்கு வீரர்களை வாங்கியது ,குறிப்பாக ஆல்ரவுண்டர் பொல்லார்ட் இடத்திற்கு கேமரூன் கிரீனையும் அணியின் பலமான பௌலிங் யூனிட்டை மேலும் பலப்படுத்தும் விதமாக ஜே ரிச்சர்ட்சனையும் மற்றும் பியூஸ் சாவ்லாவையும் வாங்கினார்கள்.

இதனால் மும்பை அணியின் பிளேயிங் -11  கண்டிப்பாக இதுவாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.அதன் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் -11 

 

பிளேயிங் -11(தோராயமான )

ரோஹித் சர்மா (கேப்டன்) 

இஷான் கிஷன் (விக்கெட்கீப்பர்) 

சூர்யகுமார் யாதவ்

டிம் டேவிட் (வெளிநாடு)

டெவால்ட் ப்ரீவிஸ் (வெளிநாடு)

திலக் வர்மா

கேமரூன் கிரீன் (வெளிநாடு)

ஹிருத்திக் ஷோக்கீன்

பியூஷ் சாவ்லா

ஜஸ்பிரித் பும்ரா

ஜோஃப்ரா ஆர்ச்சர் (வெளிநாடு)

 

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம் :

விக்கெட்கீப்பர்கள் :இஷான் கிஷன்,டிரிஸ்டன் ஸ்டப்ஸ்(தென்.ஆ ), விஷ்ணு வினோத்.

பேட்ஸ்மேன்கள் : ரோஹித் சர்மா, ராமன்தீப் சிங், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டெவால்ட் ப்ரீவிஸ் (தென்.ஆ ).  

ஆல்ரவுண்டர்கள் :டிம் டேவிட் (ஆஸி),ஹிருத்திக் ஷோக்கீன்,அர்ஜுன் டெண்டுல்கர்,குமார் கார்த்திகேயா,கேமரூன் கிரீன் (ஆஸி),நேஹால் வதேரா,ஷம்ஸ் முலானி, துவான் ஜான்சன் (தென்.ஆ).

பௌலர்கள் : ஜஸ்பிரித் பும்ரா,ஜோஃப்ரா ஆர்ச்சர் (இங்கி),அர்ஷத் கான்,ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் (ஆஸி),ஆகாஷ் மத்வால்,ராகவ் கோயல்,பியூஷ் சாவ்லா,ஜே ரிச்சர்ட்சன் (ஆஸி).