ஐபிஎல் 2023 : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய ஜெர்சி அறிமுகம்..!!

ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டங்களை வென்று முன்னணி அணியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில் புதிய பொலிவுடன் உள்ள ஜெர்சி உடன் களமிறங்க உள்ளது.
ஐபிஎல் தொடரின் முக்கிய அணியான மும்பை இந்தியன்ஸ் அணி 2023 தொடருக்கான புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த புதிய ஜெர்சியில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் இல்லை பழைய ஜெர்சியில் உள்ளது போலவே நீல நிறமும் தங்க நிற கோடுகளும் இடம்பெற்றுள்ளது.மேலும் இதற்கு இடையில் மிகவும் அடர்த்தியான மற்றும் மெல்லிசான நீல நிற கோடுகள் புதிதாக இடம்பெற்றுள்ளது
மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய ஜெர்சியை பிரபல வடிவமைப்பாளர்கள் சாந்தனு மற்றும் நிகில் இருவரும் வடிவமைத்துள்ளார்கள். இந்த ஜெர்சியில் இடம்பெற்றுள்ள வடிவமைப்புகள் மும்பை நகரத்தின் சிறப்பை பிரதிபலிக்கும் விதத்தில் உள்ளதாக அணி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மோசமான தோல்வியை அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை புதிய பொலிவுடன் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் பங்கேற்று வெற்றிகள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பலபரிச்சை மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன்ஸ் அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, ஜோஃப்ரா ஆர்ச்சர், டிம் டேவிட், முகமது அர்ஷத் கான், ரமன்தீப் சிங், ஹிருத்திக் ஷோக்கீன், அர்ஜுன் டெண்டுல்கர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஆகாஷ் மத்வால், கேமரூன் கிரீன், ஜே ரிச்சர்ட்சன், பியூஷ் சாவ்லா, துவான் ஜான்சன், விஷ்ணு வினோத், ஷம்ஸ் முலானி, நேஹல் வதேரா, ராகவ் கோயல்.