ஐபிஎல் 2023 : மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறந்த பிளேயிங் 11 குறித்து ஒரு பார்வை..!!

இந்தியாவின் சிறந்த டி20 தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரில் முக்கிய அணியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறந்த பிளேயிங் லெவன் பற்றி காண்போம்.
ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மிக விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தொடருக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்று முன்னணி அணியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மோசமான தோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற முழு வீச்சில் செயல்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை அணியில் இருந்து சிறந்த ஆல்ரவுண்டர்கள் பொல்லார்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா விலகி உள்ளார்கள், மேலும் அணியின் முன்னணி பவுலர் ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் அணியின் துவக்க வீரர்கள் இடத்தில் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் களமிறங்குவார்கள், அடுத்து மிடில் ஆர்டர் பேட்டிங்கை நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் சூர்யா குமார் யாதவும் அணியின் பவுலிங் யூனிட்டை இங்கிலாந்து பவுலர் ஜோப்ரா ஆர்ச்சரும் வழிநடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறந்த முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் கண்டிப்பாக, இந்த ஆண்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் ஏப்ரல் 2ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறந்த பிளேயிங் 11 : ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (வி.கீ), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட்/டெ வால்ட் ப்ரீவிஸ், கேமரூன் கிரீன், ராமன்தீப் சிங், குமார் கார்த்திகேயா, ஹிருத்திக் ஷோக்கீன்/ஷாம்ஸ் முலானி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜே ரிச்சர்ட்சன்/ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.
மும்பை இந்தியன்ஸ் அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), டிம் டேவிட், ராமன்தீப் சிங், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் ப்ரீவிஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜஸ்பிரிட் பும்ரா, அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷத் கான், குமார் கார்த்திகேயா, ஹிருத்திக் ஷோக்கீன், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஆகாஷ் மதுவால் , கேமரூன் கிரீன், ஜே ரிச்சர்ட்சன், பியூஷ் சாவ்லா, துவான் ஜான்சன், விஷ்ணு வினோத், ஷம்ஸ் முலானி, நேஹால் வதேரா, ராகவ் கோயல்.