ஐபிஎல் 2023 : பும்ராவை அடுத்து மேலும் ஒரு முன்னணி பவுலர் விலகல்..!! மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மேலும் பின்னடைவு..!!

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து பவுலர் ஒருவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார், ஏற்கனவே அணியின் முக்கிய பவுலர் ஜஸ்பிரீத் பும்ரா அணியில் இருந்து விலகிய நிலையில் தற்போது மும்பை அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடர்களில் ஒன்றான ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தொடருக்காக தீவிரமாக தயாராகி வரும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர்ந்து சோகமான சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அதாவது ஐபிஎல் தொடருக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து முக்கிய வீரர்கள் காயத்தினால் தொடர்ந்து விலகி வருகிறார்கள்.
இந்த தொடரில் இருந்து மும்பை அணியின் முக்கிய பவுலர் ஜஸ்பிரீத் பும்ரா விலகி உள்ள நிலையில், அவரை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் இளம் வேகப்பந்து பவுலர் ஜே ரிச்சர்ட்சன் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு உள்ளதால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
அதாவது இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்ற ஜே ரிச்சர்ட்சனுக்கு பி.பி.எல் தொடரில் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் தீவிரம் அடைந்த நிலையில் ஒரு நாள் தொடரில் இருந்து விலகினார். இதையடுத்து தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு தொடரில் பங்கேற்க மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் மினி ஏலத்தில் 1.5 கோடிக்கு வாங்கப்பட்ட ஜே ரிச்சர்ட்சன் தொடரில் இருந்து விலகியுள்ளது மும்பை அணிக்கு பின்னடைவு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஆஷஸ் தொடரில் ஜே ரிச்சர்ட்சன் பங்கேற்பதும் சந்தேகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.