ஐ.பி.எல் 2023: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமனம்..! கோப்பையை வெல்ல அனைத்து வகையிலும் தயராகிறது ..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: December 28, 2022 & 18:30 [IST]

Share

மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல் தொடரில் 5-முறை சாம்பியன் படங்களை வென்று அசதியுள்ளது,எனினும் கடந்த ஆண்டு நடந்த தொடரில் மோசமான தோல்வியை தழுவியது இதனை சரி செய்யும் வகையில் அணியில் பல மாற்றங்களை செய்து வந்த நிலையில் புதிய பேட்டிங் பயிற்சியாளரையும் நியமித்துள்ளது.

ஐ.பி.எல் மினி ஏலத்திற்கு முன்பு அணியில் புதிய மாற்றங்களை செய்யும் வகையில் பல வீரர்களை விடுவித்து,அந்த இடங்களுக்கு புதிய வீரர்களையும் வாங்கிய அணி நிர்வாகம்.

அடுத்ததாக அணியின் புதிய  துணை பேட்டிங் பயிற்சியாளராக அருண்குமார் ஜெகதீசன் என்பவரை நியமித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அருண்குமார் ஜெகதீசன் பெரிய அளவில் சாதிக்க வில்லை என்றாலும்,முதல் தர கிரிக்கெட்டில் சுமார் 100-போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவ வீரர்.

அதனால் மும்பை அணியின் துணை பேட்டிங் பயிற்சியாளர்  பதவிக்கு பொருத்தமான ஒருவர் என்பதில் ஐயமில்லை.

மேலும் இவர் இந்திய உள்நாட்டு தொடர்களில் கர்நாடக அணிக்காக 16-வருடங்கள் விளையாடியுள்ளார்,அதன்பின் ஓய்வு பெற்று கர்நாடக அணியின் பேட்டிங் பயிற்சியாளராக களமிறங்கினார்.

இவர் கர்நாடக அணி தொடர்ந்து இருமுறை (2013-2014,2014-2015)ரஞ்சி கோப்பை ,இரானி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே கோப்பைகளின்  சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவியுள்ளார்.     

இதற்கு  அருண்குமார் ஜெகதீசன் ஐ.பி.எல் தொடர்களிலும், (2019-2020)புதுச்சேரி அணியின் தலைமை பயிற்சியாளராகவும் மற்றும் அமெரிக்கா நாட்டின் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றியுளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ் அணி தனது 6-வது சாம்பியன் பட்டத்தை வெல்ல அனைத்து வகையிலும் தயாராகி வருவது தெளிவாக தெரிகிறது,இந்நிலையில் வரும் ஐ.பி.எல் தொடரில் மும்பை அணி சிறப்பான பங்களிப்பை அளிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.