WPL 2023 : டெல்லி அணியை சிதறடித்து மும்பை இந்தியன்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி..!! | mi vs dc 2023

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்பட்டு வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 7 வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை துவம்சம் செய்து மும்பை இந்தியன்ஸ் அணி தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் முன்னணி அணியாக அனைத்து அணிகளுக்கு சவால் விடும் விதத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி என்று கூறினால் மிகையில்லை, இந்த தொடரின் 7வது லீக் போட்டியில் மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் விளையாடினார்கள்.
இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி ஆரம்பம் முதலே மும்பை அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் மிகவும் திணறியது.டெல்லி அணியின் அனைத்து வீராங்கனைகளும் உடனுக்குடன் ஆட்டமிழந்த நிலையில் பொறுப்புடன் விளையாடிய டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் 43(41) ரன்கள் பெற்று ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் 18 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 105 ரன்கள் பதிவு செய்து மிகவும் பரிதாப நிலையில் இருந்தது, அதன்பின் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல தொடக்கத்தை அளித்த நிலையில்,15 ஓவர்களில் மும்பை அணி 109 ரன்கள் பெற்று வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு உதவும் வகையில் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்திய சைகா இஷாக் 3 ஓவர்கள் வீசி 13 ரன்கள் அளித்து 3 முன்னணி விக்கெட்டுகளை ஆட்ட நாயகி விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் கேப்டன் மெக் லானிங் தலைமையில் தோல்வியை தழுவாமல் இருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வெற்றி பயணத்திற்கு முடிவு கட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி, மேலும் தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. தற்போதைய நிலையில் 3 வெற்றிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.