ஐபிஎல் 2023 தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி பிளேயிங் லெவன் ரெடி ..!! | mumbai best playing 11 ipl 2023

ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டங்கள் பெற்று முதன்மை அணியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் 2023 ஆம் தொடருக்கான மிரட்டல் பிளேயிங் லெவன் பற்றி காண்போம்.
இந்தியாவின் உள்நாட்டு தொடர்களில் முக்கிய தொடராக இருக்கும் ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்று முன்னணி அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி வலம் வருகிறது. அதே சமயத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமான தோல்வி அடைந்து தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது.
இந்நிலையில் ஐபிஎல் 2023 ஆம் தொடரில் பழைய மிரட்டல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடி வெற்றிகளை பெறும் வகையில் அணியில் முன்னணி வீரர்கள் இடம் பெறும் நிலையில் ஒரு சிறந்த பிளேயிங் லெவன் காம்பினேஷன் உடன் மிகவும் பலமான அணியாக களமிறங்க உள்ளது.மும்பை அணியின் துவக்க வீரர்கள் இடத்தில் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இளம் வீரர் இஷான் கிஷன் அணிக்கு பலம் சேர்க்கிறார்கள்.
இதனை அடுத்து அணியின் மிடில் ஆர்டர் இடத்தில் அனுபவ வீரர் சூர்யா குமார் யாதவ் உடன் இளம் வீரர்கள் திலக் வர்மா, டிம் டேவிட் ஆகியோர் அணியின் பேட்டிங்கை உறுதிப்படுத்துகிறார்கள். அதன்பின் அணியின் ஆல்ரவுண்டர் இடத்தில் கேமெரூன் கிரீன் மிகவும் உதவியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக அணியின் பவுலிங் யூனிட்டை வழிநடத்த பும்ரா இடத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் இடம்பெற்றுள்ள நிலையில் மிகவும் மும்பை அணி பலம் வாய்ந்ததாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறந்த பிளேயிங் லெவன் : ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (வி.கீ), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், கேமரூன் கிரீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, ஹிருத்திக் ஷோக்கீன், ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப்.
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் தனது முதல் போட்டியில் ஏப்ரல் 2ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியோடு பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோத உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்று அசத்தும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.