மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா எடுத்துள்ள முக்கிய முடிவு..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!! | ipl 2023 mi rohit plan

ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில் முன்னணி அணியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சில போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இதனால் மும்பை அணியின் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளார்கள் என்று தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் அதிகப்படியாக 5 முறை சாம்பியன் பட்டங்கள் வென்று முக்கிய அணியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா பணிச்சுமை காரணமாக தொடரில் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தெரிய வந்துள்ளது. மேலும் ரோஹித் சர்மா பங்கேற்காத போட்டிகளில் கேப்டனாக முன்னணி வீரர் சூர்யகுமார் யாதவ் செயல்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரை அடுத்து ஒருநாள் உலக கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் பங்கேற்க உள்ளதால், பிசிசிஐயின் அறிவுரையின் பெயரில் பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஒரு சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமான தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது, இந்நிலையில் இந்த 2023 ஆம் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்று தனது நிலையை நிரூபிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சில போட்டிகளில் இருந்து விலகுவது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் அணி நிர்வாகத்தில் இருந்து வெளியான தகவல் படி ரோஹித் சர்மா போட்டிகளில் மட்டும் தான் பங்கேற்க மாட்டார், ஆனால் அனைத்து போட்டிகளிலும் அணியின் முடிவுகள் பங்கேற்பது மற்றும் அணியின் வீரர்களுக்கு யோசனை போன்றவற்றில் வழக்கம் போல் உறுதுணையாக இருப்பார் என்று தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் ஏப்ரல் 2ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.